pikku

யாழ்ப்பாணம் முற்றவெளியை சுடுகாடாக்கிய பௌத்தர்கள்! எரிந்தது பிக்குவின் சடலம்!

யாழ்ப்பாணம் முற்றவெளியில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் சடலத்தை தகனம் செய்யும் நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மரணம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளியில் தீவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் உள்ள முற்றவெளியில் சடலத்தை தகனம் செய்ய மாநகர சபை அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் நீதிமன்றிலும் தடை உத்தரவு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றமும் தகனம் செய்ய தடைவிதிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இதனிடையே வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே சடலம் ஊர்வலமாக முற்றவெளி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கடந்த இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*