kilinochi copy

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக்க முயன்ற சிறீதரன்! முதல் நாளே உடைத்தெறிந்த மக்கள்!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் முயற்சி மேற்கொண்டுவருகின்ற நிலையில் அதற்கான பெயர் பலகை மக்களால் அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் கீழ் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கொண்டுவந்தார்.

இதன் ஒரு கட்டமாக துயிலும்இல்லத்திற்கு தாவிரவியல் பூங்கா என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர் பலகையினை நேற்றைய நாள் பிரதேச சபையினர் ஊடாக நாட்டியிருந்தார்.

ஏற்கனவே பலத்த எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த பெயர் பலகை நாட்டப்பட்ட இரவே அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*