mavadi

தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்!

ஈழவிடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒரு சேரப் போற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத்துயிலும் இல்லங்களில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

முதல் மாவீரர் லெப். சங்கர் வீரச்சாவடைந்த மாலை 6.05 மணிக்கு துயிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் சுடர்கள் ஏற்றப்பட்டு மக்களால் வணக்கம் செலுத்தப்பட்டிருக்கின்றன.

துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம்கள், அச்சுறுத்தல்களைத் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்க தமது உறவுகளுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் பிரதான சுடர்களை மூன்று மாவீரர்களின் தாயார் அல்லது தந்தையார் எற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் குறித்த துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட முதல் மாவீரரின் தாயார் பிரதான சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தேசங்களில் எல்லாம் மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*