Thalaivar

தலைவர் பிறந்தநாள்! பிறந்த ஊரில் புலிக்கொடி! யாழ்.பல்கலை வளாகத்தில் சுவரொட்டி!

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாளை தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

பல்கலைக்கழக வளாகம் மற்றும் முன் பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் காணப்படுவதாக தெரியவருகிறது.

இதனிடையே, தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய சின்னம் “புலி” அடையாளம் தாங்கிய கொடி ஒன்று பறக்கவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது.
வல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவே குறித்த கொடி பறக்கவிடப்பட்டிருப்பதாக வல்வெட்டித்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

valveddi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*