23758368_151571765594130_612703811_n

ஈபிடிபியைக் காட்டித் தப்பிக்க முயலும் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவு!


மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகநூலில் தான் ஈபிடிபியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

தீபச்செல்வனின் பதிவுக்கு பதில் எழுதிய  சுவிஸ் சிங்கம் அவர்கள் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவை அம்பலப்படுத்தியுள்ளார்.

சுவிஸ் சிங்கம் அவர்களின் முகநூல் பதிவு:

விடுதலைப்புலிகள் காலத்திலேயே ஈபிடிபியுடன் உறவை கொண்டுள்ள தீபச்செல்வன் வெளிவரும் ஆதாரங்கள்

—————————————————————————–
மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகப்புத்தகத்தில் தான் முன்னாள் எம்பி சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும். மேலும் ஒரு பதிவை ஏற்றியிருந்தாா்.
எனவே தீபச் செல்வனிடம் மேலும் சில கேள்விகள்.

ஈபிடிபி கட்சி பற்றி குழந்தைப் பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அவா்கள் கடந்த காலத்தில் செய்த செயற்பாடுகள் 2009 இற்கு பின்னர் பிறந்த குழந்தைகளுக்கும் தெரியும்.
இங்கே எனது உள் பெட்டியில் பிரான்சில் இருந்து நண்பர் ஒருவா் இந்த படங்களையும் சில தகவல்களையும் அனுப்பியிருந்தாா். சில வருடங்களுக்கு முன் முகநூலில் உலாவியது என்று குறிப்பிட்டுள்ளாா். அது தொடர்பில் கவிஞரின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

ஒன்று – தீபச்செல்வன் 2009 இற்கு முன் ஈபிடிபியுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தவா் என்றும், அவா் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் போதே சிறிதர் தியட்டருக்கு அடிக்கடி சென்று வருபவா் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு – 2009 இற்கு முன் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தீபச் செல்வன் ஈபிடிபியுடன் நெருங்கிய உறவை கொண்டவா் என்பதற்கு இந்த படம் ஆதாரமாக உள்ளது.

இந்த காலத்தில் சிறிதர் தியட்டரின் பின் பக்கம் டக்ளஸ் தனது கட்சியை சேர்ந்த மிகிமிக நம்பிக்கைக்குரியவா்களை தவிர வேறு எவரையும் அனுமதிப்பது இல்லையாம். ஆனால் தீபச் செல்வன் சிறிதர் தியட்டரின் பின்பக்கத்தில் 2009 க்கு முன் இடம்பெற்ற ஒரு பொங்கல் நிகழ்வில் மகிழ்ச்சியாக கலந்துகொண்டுள்ளாா்.

எனவே விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பலத்த பாதுகாப்புடன் இருந்த டக்ளஸ் தனது பின் பக்கத்திற்கு தீபச்செல்வனை அனுமதித்து பொங்கல் கொண்டாடும் அளவுக்கு ஈபிடிபிக்கும் அவருக்கும் உறவு காணப்பட்டுள்ளது.

23845137_151571768927463_1860386065_n
இந்த படத்தில் கவிஞர் குறிப்பிட்ட சந்திரகுமாா், டக்ளஸ், உள்ளிட்ட ஈபிடிபி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இவா்களுடன் தீபச்செல்வன் தீருநீறு வாங்கி பூசி மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடும் காட்சிகள் காணப்படுகின்றன.
இவ்வாறே தீபச்செல்வனுக்கும் ஊரேழு இராணுவ முகாமுக்குமான உறவும் காணப்பட்டதாக அவரின் பல்கலைகழக மாணவா்கள் இன்றும் தெரிவிக்கின்றனர்.
எனவே விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலேயே ஈபிடிபியுடன் நெருங்கி உறவை கொண்டுள்ள தீபச்செல்வன்தான் இன்று இவ்வாறு பேசி வருகின்றாா்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் யார் அரசியல் செய்கின்றனா் என்பது கவிஞருக்கு நன்றாகவே தெரியும் எனவே அவா்களை நோக்கி கேள்வி எழுப்பாது எமது தாயக மக்களால் தேற்கடிக்கப்பட்ட சந்திரமாரை இழுப்பது என்பது தீபச்செல்வன் தனது தவறான கருத்துக்கு எழுந்து எதிர்ப்பை சமாளிப்பதற்கும், சிறிதரனின் மாவீரர் நாள் அரசியலைப் பலப்படுத்துவதற்குமாகும்.

மாவீரர் துயிலுமில்லங்களில் சந்திரமாரோ, சிறிதரனோ அல்லது எந்த அரசியல் தரப்புக்களும் அரசியல் செய்ய தாயக மக்கள் அனுமதிக்கமாட்டாா்.

இப்படிக்கு
அன்புடன்
சுவிஸ் சிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*