tsunami

மட்டக்களப்பில் நீர் நிலைகளில் மாற்றம்! சுனாமி அச்சத்தில் வடக்கு – கிழக்கு மக்கள்!

சுனாமி அச்சம் காரணமாக வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேச மக்களிடையே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ஒலிபெருக்கிமூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது என்று மாவட்ட செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்தது.

ஆனாலும் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் பல பகுதிகளில் நீர் நிலைகளில் மாற்றம் ஏற்றபட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்திலும், வடமராட்சி கிழக்குப் பிரதேசத்திலும் இன்று சுனாமி தொடர்பான அச்ச நிலைமை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து வடமராட்சியின் கரையோரப் பிரதேசங்களி உள்ள பாடசாலைகள் சில மூடப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம், அம்பாறையில் கல்முனை, பாண்டிருப்புப் பிரதேசங்களில் கிணறுகளின் நீர் திடீரென வற்றியது என்றும் அதையடுத்து பதற்ற நிலைமை ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் பாடசாலைகளில் இருந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

தற்போது நாட்டில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*