kaaka anna

மாவீரர்களின் குடும்பத்தினரே சுடரேற்றவேண்டும் – மூத்த போராளி காக்கா அண்ணர் வலியுறுத்து! (காணொலி)

மாவீரர் நாளை தமிழ் அரசியல் வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக பய ன்படுத்த கூடாது. என தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மு.மனோகரன் (காக்கா அண்ணர்) கூறியுள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.

தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழிச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து இறுதிக்காலம் வரையில் விடுதலைப்போராளியாக செயற்பட்ட காக்கா அவர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தின் போது தனது பிள்ளைகள் இருவரை ஈகம்செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*