suresh - gajendra

புதிய கூட்டணி தயார்? – கஜேந்திரகுமார் அறிவிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இன்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேரவையின் பங்களிப்புடன் ஈபிஆர்எல்எப், த.தே.ம.முன்னணி உள்ளடங்கலாக குறித்த அணி அமையும் எனவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறித்த கூட்டணி எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ முடிவுகள் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*