poorayam-1024x719

கொம்பு சீவி விட ஆக்கள் தேவை!

வணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே

கொம்பு சீவிவிடுறது எண்டா தெரியும்தானே. ஒராளுக்கு இரண்டு விசயம் தெரியும் எண்டா, ஆளை வைச்சு கொஞ்ச விசயங்கள் ஆகவேணும் எண்டா, அவருக்கு கொம்பை சீவிவிடுறது பாருங்கோ.

இப்ப பாருங்கோ மகிந்த ஒரு சொல் கேக்கிறான் இல்லை. என்ன செய்யலாம்? ரணிலை வைச்சு மோதிபார்த்தால் அடிவேண்ட வேண்டி வரும். பட்டதுபோதும். மகிந்தவின்ர கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆளை வெளியில கொண்டுவந்தா எப்பிடி?

அப்ப மைத்திரிய எடுப்பம். அதுக்கு முதல் மைத்திரிய அமெரிக்காவுக்கு கூப்பிட்டு எதிர்கால தலைவர் என கருதப்படக்கூடியவர் என பட்டம் கொடுக்கிறது. இப்ப மைத்திரிய தெரியாதவ என்ன சொல்லுவினம். மைத்திரிய பார் அமெரிக்கா கூப்பிட்டு இப்பிடி பட்டம் கொடுக்கிறது எண்டா, ஆள் ஒரு விசய காறன்தான் எண்டு கதைப்பினம்.

இப்பிடித்தான் மைத்திரி மகாராசா ஆன கதை.

இப்ப இந்த விளையாட்டு, எங்கட தமிழ் ஆக்கள கொஞ்சப்பேர வைச்சு, நடக்க தொடங்கியிருக்கு.

இண்டைக்கு யீரிஎப் சுரேந்திரன் என்ன செய்யிறார்? ரிஎன்ஏ சுமந்திரன் என்ன செய்யிறார்? தமிழர் தரப்போட கதைக்கவேணும் எண்டால், இவை இரண்டுபேரும்தான் தோதான ஆக்கள் எண்டு வெஸ்ரேண் பவர்ஸ் சொல்லுகினமாம்.

அவையேன் சொல்லுகினம்? இந்தியா முன்னம் ஆயுதம் கொடுத்து எங்கட ஆக்கள வளர்த்துவிடக்க என்ன செய்தவ? வளர்க்கிற விதத்தில கவனமாய் இருந்தினம்.

குடுக்கிற துவக்குகளும் கொஞ்சநாள்ல சுட ஏலாமல் நிக்கவேணும். வேண்டுற ஆக்களும் எங்கட சொல்லு கேக்கவேணும். பிறகு என்ன நடந்தது?

இரண்டு வருசத்தில துவக்கு சுடல்ல. பெடியள் இதை றோ ஏகே எண்டுதான் சொல்லுவாங்கள். புலியள் தவிர, எல்லாரையும் சொல்லுகேக்கிற பிள்ளையள் எண்டு பார்த்தாங்கள். புலியளை அழிக்கவேணும் எண்டு முடிவெடுத்தாங்கள்.

அதுபோலதான், இப்பவும் பவர்பிளே பண்ணுறது எண்டால், தமிழர் தரப்பில அவையின்ர சொல்லு கேக்கிற ஆக்கள வேணுமாம்.

அப்ப இவன் அப்புக்காத்து பெடியனுக்கு இப்பிடியான வேலையெண்டா வலு புளுகம். எக்கவுண்டன் சுரேந்திரனுக்கு இன்னும் புளுகம். தான் சொல்லித்தான் எல்லாமே அசையுது எண்டு, சும்மாவே றீல் விடுவான். பிறகென்ன சொல்லவே வேணும்.

சரி விசயத்திற்க வருவம்.

இப்ப இழுத்து இழுத்துபோற அரசாங்கத்தில, நான் தான் எதிர்கட்சி தலைவரா வரவேணும் எண்டு, சம்பந்தர் சொன்னவரல்லே. வடக்கு கிழக்கு எண்டு, தமிழீழ தாயகத்தில அரசியல் நடத்திற கட்சிக்கு இலங்கைத்தீவில எதிர்கட்சி கேக்கிறது நியாயமோ. ஐம்பது வருசமா அரசியல் செய்தவர் எண்டு சொல்லிற, சாணக்கிய சம்பந்தர்ற சாணக்கியத்தை நினைக்க இன்னும் கவலைதான்.

இப்ப அடுத்து நடக்கப்போற தேர்தல்ல தோத்தா, அரசியல விட்டு போறதா சுமந்திரன் அறிக்கைவிட்டிருக்கிறார் அறிஞ்சனியளே. அதோட மட்டும் நிண்டா பறவாயில்ல.

புலிகளின்ர போராட்டம் பயங்கரவாதம் எண்டும், சுமந்திரன் வாயை விட்டிருக்கிறார். புலியள்ல மட்டுமே, 40000 பிள்ளையள் இந்த மண்ணுக்காக செத்துப்போச்சு. இதைவிட எத்தினை பிள்ளையள் மக்களின்ர விடுதலை எண்டுதானே செத்துப்போனதுகள்.

இதுகள விட ஒரு இலடசத்திற்கும் மேல எங்கட குஞ்சு குருமனுகள் எல்லாம், இந்த தேசவிடுதலைப் போராட்டத்திலதானே செத்துப்போனதுகள்.

எங்கட விடுதலைப்போராட்டத்தின்ர நியாயமான பக்கங்களை புரியாத, விளங்கமறுக்கிற, அதுக்கு எதிரா கதைக்கிற, சுமந்திரன மாதிரி ஆக்கள் எங்களுக்கு தேவையோ?

நான் சொல்லிறத சொல்லிட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*