poorayam-1024x719

புலிகளை தோற்கடித்ததை வரவேற்கின்றேன்

வணக்கம் எல்லாருக்கும். எப்பிடி இருக்கிறியள்?

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னம் நடந்த கொடுமையள நினைக்கக்க இப்பவும் நெஞ்சம் பதறுது.

அதுகளை நெஞ்சில வைச்சு அழுறதுக்கு கூட வழியில்லாம இருக்கிறம். இண்டைக்கு உலக சமுதாயம் எப்பிடியெல்லாம் முன்னேறிப்போயிருக்கு. ஆனா மாறி மாறி வாற அரசாங்கங்கள் எடுக்கிற இப்பிடியான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஏன் உலகநாடுகள் கேள்விகேக்குது இல்லை.

உலகநாடுகள்  தான் கேள்வி கேட்காட்டி பறவாயில்லை. எங்கட தமிழ்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்லுகினம்?

இப்ப அஞ்சு வருசமா தாங்கள் வெற்றிவிழா கொண்டாடினவையாம். இனிமேல் பிரிவினைவாதத்தை தோற்கடித்த நாளாக கொண்டாடப்போவதாக மைத்திரி அரசாங்கம் அறிவிச்சிருக்கு.

பிரிவினைவாதத்தை தோற்கடிச்ச நாளெண்டா அதிரன்ர அர்த்தம் என்ன? தமிழன்ர போராட்டத்தை தோற்கடிச்ச நாளெண்டு தானே. அதுதானே வெற்றிவிழா.

அப்பிடியெண்டா இவ என்னத்தை சொல்ல வருகினம். தாங்கள் இன்னும் மாறல்ல எண்டுதானே.

ஆனா எங்கட சம்பந்தர் ஐயா பிபிசிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் கேட்டனியளே. தான் அரசாங்கத்தின்ர முடிவை வரவேற்பதாக மனுசன் சொல்லியிருக்கிறார்.

தமிழர்தரப்பின்ர பிரதிநிதி கதைக்கிற கதை இதுவோ எண்டு சனம் குமைஞ்சுகொண்டு இருக்குது.

இண்டைக்கு புதுசா அரசாங்கம் வந்தப்பிறகு தமிழர் தரப்பு பேசிக்கொண்டிருக்கிறது தனிய சிங்கள அரசாங்கத்தோட இல்லையெண்டதை எங்கடையாக்கள் விளங்கிக்கொள்ளுறதா தெரியல்ல.

இண்டைக்கு மைத்திரி – ரணில் – சந்திரிகா எண்ட முகத்தோட இருக்கிறது இண்டைக்கு சர்வதேச அரசுகள் எண்டு சொல்லப்படுற மேற்குலக அரசுகள் தான். ஏனெண்டா இண்டைக்கு மேற்கத்தைய அரசுகள் எல்லாம் சிறிலங்கா அரசு காட்டுற இராசதந்திரத்தை உண்மையாகவே விரும்பினவை.

இப்பிடியே இழுத்து இழுத்து, தமிழருக்கு, தோல்வி கண்ட இனத்திற்கு, சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில ஒரு தீர்வு.

அதாவது ரணில் சொல்லிற மாதிரி எங்கடை படையினர் பிழைவிட்டிருந்தால் இனிமேல் பிழைவிடாமல் பார்க்கிறதுக்கான திட்டம் அல்லது ஒரு தீர்வு.

இதுகளை சிங்கள அரசு சொல்லுது எண்டோ அல்லது அமெரிக்கா சார்பு மேற்குலக அரசுகள் சொல்லுது எண்டோ புதுசா நாங்கள் யோசிக்க தேவையில்லை. ஏனெண்டா அவையின்ர அடிப்படை குணமே அதுதான்.

ஆனா எங்கடையாக்கள். எங்கடையாக்கள் எண்டு சொல்லப்படுற கூட்டமைப்பு தலைமை என்ன செய்யுது? என்ன சொல்லுது? என்டுறது முக்கியமல்லோ.

திங்கட்கிழமை மே மாதம் 18 ஆம் திகதி மாத்தறையில தமிழர் விடுதலை போராட்டத்தை தோற்கடித்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் மைத்திரி பிசியா இருக்கிறார். படை அணிவகுப்பும் பகட்டு ஆரவாரத்திற்கும் குறையிருக்க போறல்ல எண்டுறது வடிவா தெரியுது.

ஒரேயொரு கேள்விதான். இந்த கொண்டாட்டத்திற்கு சம்பந்தர் போவாரோ?

அடுத்த கிழமை வாறன் அப்ப இன்னும் கதைப்பம் வரட்டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*