sampanthan

கைதிகள் விவகாரம்; மைத்திரிக்கு மடல் வரைந்த சம்பந்தன்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுவிக்குமாறு கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (12) கடிதம் எழுதியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தமது வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, இன்று 18 ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் சம்பந்தன் கடிதம் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*