thero

இலங்கைக்குள் வெளிநாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் புகுந்துவிட்டன என்கிறார் ஞானசார தேரர்!

நாட்­டி­னுள் இஸ்­ரே­லின் மொசாட் புல­னாய்­வுப் பிரிவு, இந்­தி­யா­வின் றோ புல­னாய்­வுப் பிரிவு, அமெ­ரிக்­கா­வின் சி.ஐ.ஏ. புல­னாய்­வுப் பிரிவு, சீனா­வின் புல­னாய்­வுப் பிரிவு என்று முக்­கி­ய­மான பலம் ­மிக்க நாடு­க­ளின் புல­னாய்­வுப் பிரி­வு­கள் எல்­லாம் இலங்­கைக்­குள் புகுந்­துள்­ளன. நாட்­டில் பெரிய விளை­வு­கள் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தா­லேயே நாம் அமை­தி­யாக இருக்­கின்­றோம். இவ்­வாறு பொது­ப­ல­சே­னா­வின் பொதுச் செய­லர் ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறு­பான்மை மக்­கள் பேசா­மல் இருக்­கின்­ற­னர். சிறு­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­களே நாட்­டில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த முயல்­கின்­ற­னர். அவர்­களே நாட்­டில் இன­வா­தத்­தைத் தூண்­டு­கின்­ற­னர்.

நாம் இய­லா­மை­யி­னால் பேசா­மல் இருக்­க­வில்லை. எல்லா நாடு­க­ளி­ன­தும் புல­னாய்­வுப் பிரி­வு­கள் இங்கே நிலை­கொண்­டுள்­ளன.

எமது நட­வ­டிக்­கை­க­ளால் நாட்­டில் பெரிய விளை­வு­கள் வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தால் அமை­தி­யாக இருக்­கின்­றோம்– என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*