army2

தப்பி ஓடிய இராணுவத்தினர் ஆறாயிரத்து 631 பேர் கைதாம்!

பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய சரணடையாத மற்றும் சட்ட ரீதியாக விலகிக்கொள்ளாத இராணுவத்தினர் 6 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை சட்ட ரீதியில் விலகிக்கொள்ளும் பொருட்டு கடந்த வருடம் (2016) டிசெம்பர் மாதம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் குறிப்பிட்ட சிலரே சட்ட ரீதியா விலகிச் சென்றனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 6 ஆயிரத்து 631 கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*