maavai1

‘தேசியத் தலைவர்’; தடுமாறும் மாவை!? (காணொலி)

தமிழ்லீடர் இணையத்துக்கான நேர்காணலின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்க முடியாது கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தடுமாறினார்.

அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தமிழ்லீடர் இணையக்குழுமத்தினர் நேர்காணல் ஒன்றிற்க்காக சந்தித்திருந்தனர். அதன் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் ஆற்றிய உரை தொடர்பில் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பாராளுமன்ற சட்டப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது என நழுவிக்கொண்டார்.

இந்நிலையில் தனிப்பட்ட ரீதியில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் உங்கள் கருத்து என தமிழ்லீடர் சார்பில் கேள்வி எழுப்பிய போது மாவை சேனாதிராஜா தடுமாறிப்போய் கருத்துவெளியிட்டார்..

அவர் என்ன சொன்னார், அவருடைய நிலைப்பாடு உட்பட்டவிடயங்களை அறிந்து கொள்ள காணொலியைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*