karu

தமிழ்மொழி பேச முடியாமை தொடர்பில் வெட்கம் அடைகிறேன் என்கிறார் கரு!

தமிழ் மொழி பேச முடியாமை குறித்து வெட்கம் அடைவதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். துமிழ் மொழி கற்பித்தல் இருந்திருந்தால் 83 இல் இடம்பெற்றதைப் போன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியும் என நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய,

விசேடமாக அப்போது அனைத்து இராணுவ உறுப்பினர்களுக்கும் தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டமே இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகின்றது.அதன் ஆச்சிரியம் தரும் பிரதிபலனை நான் பார்த்தேன்.

நான்கு வார தமிழ் மொழி கற்பித்தல் பயிற்சியின் பின்னர் அங்கிருந்த சிப்பாய்கள் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை சிறப்பாக பேச முடிந்தது. யாழ்ப்பாணத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டதாக அதன்பின்னர் இராணுவத்தினர் என்னிடம் கூறினர்.

பிரச்சினை ஏற்படும் போது பொலிஸாரிடம் செல்வதற்கு பதிலாக அருகிலுள்ள மக்கள் இராணுவ முகாமிற்கு வருகைதர ஆரம்பித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.இரண்டு மொழிகளிலும் பேசக் கூடியதாக இருக்கின்றமை மூலம் இது சாத்தியமானது.

உண்மையில் தமிழில் எனக்கு பேச முடியாமை குறித்து நான் வெட்கமடைய வேண்டும்.இந்த நாட்டில் தமிழ் மொழியும் அரச கரும மொழி என்பதால் அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.50 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கற்கை நெறியில் இணைந்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இதனை தவிர்த்து செல்லாமல் தொடர்ந்து ஈடுபடுமாறு அனைவரிடமும் நான் கோருகின்றேன்.உங்களில் அரசியல் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியம்.நாடாளுமன்ற உறுப்பினர் பியதாசவிற்கு நன்றாக தமிழ் தெரியும் என நான் நினைக்கின்றென்.

ஏனைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அநேகமானவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது.எனினும் தமிழ் மொழியை கற்பது அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தற்போதுள்ளதை விட வேறு விதமான சூழலிலேயே நாம் எதிர்காலத்தில் வாழப் போகின்றோம்.

தேசிய சகவாழ்வு என்பது மிகவும் முக்கியம்.மூன்று இனங்களும் இணைந்தே சுதந்திரத்தைப் பெற்றோம். சுகவாழ்வுடன் கைகோர்த்து இருந்ததால் சுதந்திரத்தைப் பெற்றோம்.ஆகவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு மிகவும் முக்கியம்.

அமைச்சர் அதுகுறித்து மிகவும் தெளிவாக குறிப்பிட்டார்.வடக்கானாலும் கிழக்கானாலும் தெற்கானாலும் மேற்கானாலும் எமது அனைத்து பிரிவுகளில் மொழியை விருத்தி செய்வது மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன்.

ஆகவே இந்த கற்கை நெறி தேசிய ரீதியில் முக்கியமானது என்றே நான் நினைக்கின்றேன்.ஆகவே மொழி கற்பித்தல் இருந்திருந்தால் 83 இல் இடம்பெற்றதைப் போன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியும் என நாம் நம்புகின்றேன்.அதேபோல் தமிழ் மக்களால் சிங்கள மொழியை ஒரளவு பேச முடிந்தாலும் சிங்கள மக்கள் தமிழ் மொழி பேசுவது மிகவும் குறைவு.இதுவும்தேசிய ரீதியான குறைபாடு என்றே நான் நினைக்கின்றேன் என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*