kualayuma

குலையுமா கூட்டு அரசாங்கம்? (சமகாலப் பார்வை)

கூட்டு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக் கும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் சிலர், இப்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குத் தலை­வ­லியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளனர். வரும் செப்­டெம்பர் மாதம், பிரதி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் 18 பேர் வரை, அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி தனிக் குழு­வாகச் செயற்­படப் போவ­தாகக் கூறி வரு­கின்­றனர்.

உட­ன­டி­யாக உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்த வேண்டும், பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்­கை­களை முன்­னி­றுத்­தியே, இந்தக் குழு­வினர், அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறத் திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றனர்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஐ.தே.க.வும், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய இந்தக் கூட்டு அர­சாங்­கத்­துக்கு வந்­தி­ருக்­கின்ற ஆகப் பிந்­திய ஆபத்து இது. இதற்குப் பின்­ன­ணி யில் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி தான் இருக்­கி­றது என்­பது ஒன்றும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல.

கூட்டு எதி­ரணி தான், உள்­ளூ­ராட்சித் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்டும் என்று ஒற்­றைக்­காலில் நிற்­கி­றது. அதற் குக் கார­ணமும் இருக்­கி­றது.

இப்­போ­தைய நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும், கூட்டு எதி­ர­ணியும், ஏதோ ஒரு கலகக் குழு­வி­ன­ரா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.

இந்த நிலையை மாற்றி, தமக்­கான ஓர் அர­சியல் அங்­கீ­கா­ரத்­தையும் அடை­யா­ளத்­தையும் பெற வேண்­டு­மானால், ஒரு தேர்­தலில் தமது பலத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ .

அவர் இன்­னமும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­காமல் இருப்­ப­தற்குக் கார­ணமே, அத்­த­கைய ஓர் அடை­யா­ளத்தைப் பெறு­வ­தற்­காகத் தான்.

அந்த அடை­யாளம் கிடைத்­ததும் அவர் தனது புதிய அர­சியல் கட்­சியை பகி­ரங்­கப்­ப­டுத்­துவார். அதற்­கான தரு­ணத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­கவே, கூட்டு எதி­ரணி உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு வலி­யு­றுத்தி வரு­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு கீழ்­மட்டச் செல்­வாக்கு இல்லை. அதனால், தான் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை எதிர்­கொள்ளத் தயங்­கு­கி­றது.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்ச்சி நிர­லுக்குள் செயற்­ப­டு­கின்ற அமைச்­சர்கள் சிலரே, உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற நிபந்­த­னையை விதித்­தி­ருக்­கின்­றனர்.

அது­மாத்­தி­ர­மன்றி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இவர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் நிபந்­தனை விதித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இவர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய கலந்­து­ரை­யா­டலின் போது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் அருந்­திக பெர்­னாண்டோ கூறி­யி­ருக்­கிறார்.

அண்­மையில் மஹிந்த ராஜபக் ஷ ஜப் பான் சென்­றி­ருந்த போது, இவரும் தனி­யாகச் சென்று அவரைச் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த பலர் மஹிந்­தவின் தீவிர விசு­வா­சிகள் என்­பதில் சந்­தே­ க­மில்லை. அவர்கள் அர­சாங்­கத்­துக்குள் இருந்து தக­வல்­களை தெரிந்து கொள்­வ­தற்­கா­கவோ அல்­லது சந்­தர்ப்­பத்­துக்­கேற்ப நடந்து கொள்ளும் விதத்­திலோ தான், மைத்தி­ரி­பால சிறிசே­னவின் அர­சாங்­கத் தில் அங்கம் வகிக்­கின்­றனர்.

இவர்கள் தான் இப்­போது, அர­சாங்­கத்தில் இருந்து ஐ.தே.க.வை வெளி­யேற்றி விட்டு ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தை நிறுவ வேண்டும் என்று தொல்லை கொடுக்க ஆரம்­பித்­துள்­ளனர்.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐ.தே.க. வுக்கும் இடை­யி­லான கொள்கை முரண்­பா­டு­களால் தான் இவர்கள் இவ்­வாறு நடந்து கொள்­கி­றார்கள் என்­றில்லை.

அர­சி­ய­ல­மைப்பு மாற்ற முயற்­சி­களைத் தடுப்­பதும், மஹிந்த ராஜபக் ஷவை மீண் டும் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதும் தான், இவர்­களின் அடிப்­படை நோக்­க­மாக இருக்­கி­றது. அதனைத் தான் இவர்கள் செயற்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள அதி­ருப்தி அணி­யி­னரை சமா­தா­னப்­ப­டுத் தும் வகையில் டிசம்பர் வரையில் பொறுத்­தி­ருக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரி­யி­ருக்­கிறார். சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கூட பேச்­சுக்­களை நடத்தி வரு­கிறார்.

ஆனாலும், அதி­ருப்தி அணி­யினர் எந்த முடி­வையும் எடுத்­த­தாக கூற­வில்லை. அவர்கள் இந்தப் பதற்ற நிலை கடைசி வரை தொடர வேண்டும் என்றே விரும்­பு­வார்கள்.

ஏனென்றால், அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுத்து எதையும் செய்­யாமல் தடுப்­பது தான் அவர்­களின் முதல் இலக்கு.

இந்தக் குழப்­பங்­களால், அர­சாங்­கத்தின் பணிகள் முடக்­க­ம­டையும். அர­சி­ய­ல­மைப்பு மாற்ற முயற்­சி­களும் தா­மத­ம­டையும். இத­ னைத்தான் அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்தி, அதன் இய­லா­மையை வெளிப்­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தி­லேயே குறி­ யாக இருக்­கி­றார்கள்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ ராக நிய­மித்தால் கூட, சுதந்­திரக் கட்­சி­யி ­னரின் ஆத­ர­வுடன் அவரால் அர­சாங்­கத் தை அமைக்க முடி­யாது. காரணம், பாரா­ளு­மன்­றத்தில் அவர்­க­ளுக்கு 95 உறுப்­பி­னர்கள் தான் உள்­ளனர்.

225 பேர் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்­மைக்குத் தேவை­யான, 113 ஆச­னங்­களைப் பெறு­வ­தற்கு, மேலும் 18 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற வேண்டும்.

இது ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­யாலோ, அல்­லது மஹிந்த ராஜபக் ஷவி­னாலோ அவ்­வ­ளவு இல­குவில் சாத்­தி­ய­மான விட­ய­மாக இருக்­காது.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக பொறுப்­பேற்கும் அர­சுக்கு, 16 ஆச­னங்­களைக் கொண்ட தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்­காது. அது போலவே, 6 ஆச­னங்­களைக் கொண்ட ஜே.வி.பி.யும் ஆத­ரவு தராது.

ஏனைய கட்­சி­களின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைக்கும் தெரிவு ஒன்று இருந்தால், இந்த இரண்டு கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவை அவர்கள் பெற வேண்டும். அது சாத்­தி­ய­மில்லை.

அவ்­வா­றாயின் இருப்­பது ஒரே ஒரு தெரிவு தான். ஐ.தே.க.வுக்குள் பிள­வு­களை எற்­ப­டுத்தி, 18 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தமது பக்­கத்­துக்கு இழுப்­பது. மஹிந்த ராஜபக் ஷ இந்த உத்­தியை முன்னர் அதி­கா­ரத்தில் இருந்த போது ஒன்­றுக்கு இரண்டு தட­வைகள் கையாண்­டி­ருந்தார்.

அதன் மூலமே அவர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யையும் தக்க வைத்துக் கொண்டார்.

அது­போல இப்­போது செய்­வ­தற்கும் வாய்ப்­புகள் அரிது, ஐ.தே.க.வுக்­குள்­ளேயும் அதி­ருப்தி அணி­யினர் இருந்­தாலும், ஆட்­சியில் உள்ள தமது கட்சி அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அவர்கள் துணை போவார்­களா என்­பது சந்­தேகம்.

எனவே, தற்­போ­தைய நிலையில், சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்று ஜனா­தி­ப­திக்கு அந்தக் கட்சி உறுப்­பி­னர்கள் கொடுக்­கின்ற அழுத்தம் போலி­யா­னதே. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை செய­லற்ற நிலைக்குள் தள்­ளு­வதும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை குழப்­பு­வ­தற்­கா­கவும் தான் இவ்­வாறு நடந்து கொள்­கின்­றனர்.

அதே­வேளை, சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்தி அணி­யினர் மிரட்­டு­வது போன்று, செப்­டெம்­ப­ரிலோ, டிசம்­ப­ரிலோ, அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றினால் அடுத்து என்ன நடக்கும்? ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கவிழ்ந்து விடுமா? என்ற கேள்­விகள் உள்­ளன.

நிச்­ச­ய­மாக அப்­ப­டி­யொரு சூழலில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கவிழ்­வ­தற்­கான வாய்ப்­புகள் குறைவு. ஏனென்றால், ஐ.தே.க.வுக்கு, பாரா­ளு­மன்­றத்தில் 106 ஆச­னங்கள் இருக்­கின்­றன. அறுதிப் பெரும்­பான்­மையை விட அவர்­க­ளுக்கு குறை­வாக இருப்­பது வெறும் 7 ஆச­னங்கள் தான்.

சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்தி அணி­யினர் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறும் போது, 18 அல்­லது 20 பேர் தான் வெளியே செல்­வார்கள். எனவே கூட்டு அர­சாங்­கத்துக்கு அது பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது.

ஒரு­வேளை, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைக் காப்­பாற்­று­வ­தற்­காக, கூட்டு அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற மைத்­தி­ரி­பால சிறி­சேன முடி­வெ­டுத்­தாலும் கூட, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கவி­ழாது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெளியில் இருந்து ஆத­ரவு கொடுக்க முடிவு செய்யக் கூடும். ஏனென்றால், தற்­போ­தைய நிலையில் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வரு­வதை தடுப்­ப­தற்கோ, இன்­னொரு தேர்­த­லுக்கு முகம் கொடுப்­பதை தவிர்ப்­ப­தற்கோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெளியில் இருந்து ஆத­ரவு கொடுக்கும் முடிவை எடுக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், கூட்டு அர­சாங்­கத்தை பிரிப்­பதே மஹிந்­தவின் திட்­ட­மாக இருக்­கி­றது. அதி­லி­ருந்து இந்தக் கூட்டைக் காப்பாற்றுவதே மைத்திரி,-ரணில்,- சந்திரிகாவின் முயற்சியாக உள்ளது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்தவரையில், பிரதமர் பதவியைப் பிடிப்பது மாத்திரமே அவரது இப்போதைய திட்டம் அல்ல. அதற்கு அப்பால், 2020ஆம் ஆண்டு நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிறுத்தப் போகும், கோத்தாபய ராஜபக் ஷவோ அல்லது வேறொரு வேட்பாளரோ தான் வெற்றி பெற வேண்டும் என்பதும் கூட அவரது இலக்குத் தான்.

அதற்கு இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போட்டியிடாமல் தடுக்க வேண்டும். அவர் போட்டியிட்டால், தான் நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி கேள்விக்குறியாகும் என்பது மஹிந்தவுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே தான், எப்படியாவது இந்தக் கூட்டு அரசாங்கத்துக்கு ஆப்பு வைப்பதற்கு அவர் எத்தனிக்கிறார். இதனைக் கவனத்தில் கொண்டு தான், எப்படியாவது கூட்டை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

-சத்திரியன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*