sam23

வரலாற்றுப் பழியைச் சுமக்குமா கூட்டமைப்பு? (சமகாலப் பார்வை)

பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்­களின் ஒருங்­கி­ணைந்த கூட்­டத்தில், புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு எதி­ரான முடிவு எடுக்­கப்­பட்ட பின்னர், அர­சாங்­கத்தில் உள்ள தலை­வர்கள் அனை­வரும் ஒற்­றை­யாட்சி புரா­ணத்தைப் படிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

அஸ்­கி­ரி­யவில் நடந்த மேற்­படி கூட்­டத்தை அடுத்து, கண்­டியில் ஜனா­தி­பதி மாளி­கையில் பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்­கர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து தமது நிலைப்­பாட்டை விளக்­கி­யி­ருந்­தனர்.

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கோ, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மைக்கோ பாதிப்பை ஏற்­ப­டுத்தும் விட­யங்கள் இருக்­காது என்று உறு­தி­படத் தெரி­வித்­தி­ருந்தார்.

இது­வரை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைவு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்றும், அது உரு­வாக்­கப்­பட்­டதும், மகா­நா­யக்­கர்­களின் முன் சமர்ப்­பிக்­கப்­பட்டு அவர்­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­படும் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார் ஜனா­தி­பதி.

அதை­விட, ஒற்­றை­யாட்சி முறையை அல்­லது பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு தாம் ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மகா­நா­யக்­கர்­க­ளிடம் உத்­த­ர­வாதம் கொடுத்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி இதே வாக்­கு­று­தியை அஸ்­கி­ரிய பீடத்தின் புதிய அனு­நா­யக்­க­ருக்­கான ஆணையை வழங்கும் நிகழ்­விலும் மீள உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அனு­ரா­த­பு­ரத்தில் ருவான்­வெ­லி­சா­யவில் நடந்த நிகழ்­விலும், அலரி மாளி­கையில் இளம் பௌத்த பிக்­கு­க­ளு­ட­னான சந்­திப்­பிலும் இது­போன்ற வாக்­கு­று­தி­களைக் கொடுத்­தி­ருக்­கிறார்.

ஒற்­றை­யாட்சி மற்றும் பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரிமை ஆகிய விட­யங்­களில் எந்த விட்­டுக்­கொ­டுப்­புக்கும் இட­மில்லை என்று அவர் திட்­ட­வட்­ட­மாகக் கூறி­யி­ருக்­கிறார்.-

வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் கூட ஒற்­றை­யாட்சி, பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரிமை ஆகி­யவை உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

ஆக, அர­சாங்­கத்தில் உள்ள எல்­லோ­ருமே, ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும், பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மையை பேணும் விட­யத்­திலும் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த காலத்தில் இருந்தே, இந்த இரண்டு விட­யங்­களைப் பற்றி ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், அமைச்­சர்­களும் அவ்­வப்­போது கூறி வந்­தி­ருக்­கின்­றனர். இப்­போது அதனை வலு­வாக அழுத்திக் கூறத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர். அதற்குக் காரணம், புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி முறை நீக்­கப்­படப் போகி­றது, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரிமை இழக்­கப்­படப் போகி­றது என்ற பிர­சாரம் வலுப்­பெற்று, பௌத்த பீடங்­களின் ஒட்­டு­மொத்த எதிர்ப்­பையும் சம்­பா­தித்­தி­ருக்­கி­றது.

பௌத்த பீடங்­களின் எதிர்ப்பை மீறி, புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வது ஒன்றும் அவ்­வ­ளவு சுல­ப­மான காரி­ய­மில்லை. அதுவும், எப்­போது இழுத்து விழுத்­தலாம் என்று காத்­தி­ருப்­ப­வர்­களால் அமைக்­கப்­பட்ட கூட்டு அர­சாங்கம் ஒன்­றுக்கு, இது மிகப்­பெ­ரிய- எளிதில் வசப்­ப­டுத்த முடி­யாத அடைவு இலக்கு என்­பதில் சந்­தே­க­மில்லை. இந்­த­நி­லையில் தான் எப்­ப­டி­யா­வது மக்­க­ளுக்குக் கொடுத்த ஆணையை மீறாத வகையில், எப்­ப­டியோ ஓர் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தைக் கொண்டு வந்து விட வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

ஆனால் அது, எல்லா மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்கக் கூடிய ஒன்­றாக குறிப்­பாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணக் கூடிய ஒன்­றாக இருக்­குமா என்­பது தான் பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாக இருக்கப் போகி­றது.

ஒற்­றை­யாட்­சி­யையும், பௌத்த மதத்­துக்­கான தனித்­து­வத்­தையும் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் சிங்­களத் தலை­மைகள் எந்­த­ள­வுக்கு உறு­தி­யாக நிற்­கின்­ற­னவோ அதே­ய­ள­வுக்கு தமிழ் மக்­களும் தமது அபி­லா­சைகள் விட­யத்தில் உறு­தி­யா­கவே இருக்­கி­றார்கள்.

சமஷ்டி ஆட்சி முறை, வடக்கு- கிழக்கு இணைப்பு உள்­ளிட்ட அடிப்­படை விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்­லாத வகை­யி­லான ஓர் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் தமிழ் மக்­களின் விருப்­பா­கவும், உறு­தி­யா­கவும் இருக்­கி­றது.

ஒற்­றை­யாட்­சியைக் கைவிட முடி­யாது என்று மறுக்கும் அர­சாங்கத் தலை­வர்கள் ஒரு புறத்­திலும், ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பை ஏற்க முடி­யாது என்று உறு­தி­யான நிலையில் இருக்கும் தமிழ் மக்­களும் எவ்­வாறு ஒரு புள்­ளியில் இணைந்து கொள்ளப் போகி­றார்கள் என்­பது தான் பிர­தா­ன­மான பிரச்­சினை.

அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கிறார். ஒற்­றை­யாட்சி முறையை நீக்­கு­மாறோ, பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரி­மையை நீக்­கு­மாறோ யாருமே வழி­ந­டத்தல் குழுவில் கேட்­க­வில்லை. அப்­ப­டி­யி­ருக்க அதில் எப்­படி மாற்­றங்கள் செய்­யப்­படும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது­போல, சமஷ்டி ஆட்சி முறை மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பை யாருமே வலி­யு­றுத்­த­வில்லை என்று ஐ.தே.க.வின் அமைச்­ச­ரான லக்ஸ்மன் கிரி­யெல்­லவும் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் இரா.சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும், வழி­நடத்த்ல் குழுவில் இருக்­கின்ற நிலையில், சமஷ்­டி­யையும், வடக்கு- கிழக்கு இணைப்­பையும் அவர்கள் வலி­யு­றுத்­த­வில்­லையா என்ற கேள்­வியும், ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­கவும், பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரி­மைக்கு எதி­ரா­கவும் குரல் கொடுக்­க­வில்­லையா என்ற கேள்­வியும் எழு­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்­லவும் மாத்­தி­ர­மன்றி அமைச்சர் மனோ கணே­சனும் கூட இதே­போன்ற கருத்தை என்­பதை விட, குற்­றச்­சாட்டை கூறி­யி­ருந்தார். அவ்­வா­றாயின், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, குறிப்­பாக இரா.சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் தமிழ் மக்­க­ளுக்கு ஒன்­றையும், வழி­ந­டத்தல் குழுவில் இன்­னொன்­றையும் கூறு­கி­றார்­களா என்ற கேள்வி எழு­கி­றது.

இதனை மையப்­ப­டுத்தித் தான், குறைந்­த­பட்ச அதி­கா­ரங்­களைக் கொண்ட ஒரு தீர்வைத் திணிப்­ப­தற்கு இவர்கள் துணை­போ­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்டு, பர­வ­லாக சமூக ஊட­கங்­களில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. மக்கள் மத்­தி­யிலும் இது­பற்­றிய ஆழ­மான சந்­தே­கங்­களும் கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், அமைச்­சர்­களும் கூறு­வ­து­போல இல்லை, நாங்கள் சமஷ்­டியைத் தான் வலி­யு­றுத்­தினோம், அர­சி­ய­ல­மைப்பு வரைவு குறித்த இடைக்­கால அறிக்­கையில் ஒற்­றை­யாட்சி, சமஷ்டி ஆட்சி என்று இருக்­காது, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்­டியின் பண்­பு­களைக் கொண்ட ஆட்­சி­மு­றையை வலி­யு­றுத்­து­கி­றது என்று இருக்கும் என்று சுமந்­திரன் கூறி­யி­ருந்தார்.

இடைக்­கால அறிக்கை எப்­படி வரு­கி­றது என்­பது முக்­கி­ய­மல்ல. அதற்கு அப்பால், எவ்­வாறு ஆட்சி முறை குறித்த இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது என்­பது தான் முக்­கியம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதனை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தாலும், அர­சி­ய­ல­மைப்பு வரைவில் எத்­த­கைய ஆட்­சி­முறை என்ற பதம் சேர்க்­கப்­படும், அதற்­கான இணக்கம் எவ்­வாறு ஏற்­ப­டுத்­தப்­படும் என்­பது தான் முக்­கி­ய­மா­னது.

நிச்­ச­ய­மாக ஒற்­றை­யாட்­சியில் விட்டுக் கொடுப்­புக்கு இட­மில்லை என்று கூறும் அரச தலை­வர்கள் எவ்­வாறு, சமஷ்­டியின் பண்­பு­களை ஏற்றுக் கொள்­வார்கள் என்று நம்ப முடியும்? இது முத­லா­வது விடயம்.

அடுத்து, எவ­ருமே ஒற்­றை­யாட்­சியை நீக்க வேண்டும் என்றோ, பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரி­மைக்கு எதிர்ப்­பையோ தெரி­விக்­க­வில்லை என்று அர­சாங்­கத்தில் உள்ள தலை­வர்கள், கூறு­கி­றார்கள். வடக்கு -கிழக்கு மீள இணைக்­கப்­பட வேண்டும் என்று கேட்­க­வில்லை என்று கூறு­கி­றார்கள்.

இவர்­களின் இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரு­முகம் காட்­டு­கி­றது என்­ப­தையா, அல்­லது கூட்­ட­மைப்பை தமிழ் மக்கள் முன் கூனிக் குறுகி நிற்­க­வைக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்­டதா என்று தெரி­ய­வில்லை.

ஒற்­றை­யாட்­சியின் அடிப்­ப­டை­யி­லான தீர்வை ஒரு­போதும் ஏற்க மாட்டோம் என்று, அர­சாங்­கத்­துக்கு தாங்கள் கூறி­யி­ருப்­ப­தாக சுமந்­திரன் கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின், ஒற்­றை­யாட்சி முறையில் தான் தீர்வு என்றும், ஒற்­றை­யாட்­சியை நீக்­கு­மாறு யாருமே கோர­வில்லை என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கின்ற போது, ஏன் சுமந்­தி­ர­னிடம் இருந்து அதற்­கான எதிர்­வினை வர­வில்லை?

தனியே அர­சாங்கம் பௌத்த பீடங்­க­ளி­னதும், சிங்­கள மக்­க­ளி­னதும் எதிர்ப்­பு­களில் இருந்து பாது­காப்­ப­தற்­காக மாத்­திரம் ஒற்­றை­யாட்சிப் புரா­ணத்தை அர­சாங்கத் தலை­வர்கள் பாடு­கி­றார்கள் என்று மாத்­திரம் கருத முடி­ய­வில்லை.

இதே சாக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர்கள் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூட்டமைப்புத் தலைமை நன்றாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்களத் தலைமைகள் எப்போதுமே தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வந்திருப்பது வரலாறு. அதுபோன்று தான், இப்போதும், தமிழ் மக்களின் வலுவான அரசியல் பிரதிநிதிகளாக இருந்த கூட்டமைப்பையும், பலவீனப்படுத்த முனைகிறார்கள் போலத் தெரிகிறது.

வடக்கு- கிழக்கு இணைப்பையோ, சமஷ்டியையோ கேட்கவில்லை. ஒற்றையாட்சியை நீக்குமாறு கோரவில்லை என்று கூறியுள்ளதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது.

இது கூட்டமைப்புக்கு உள்ள மக்களின் செல்வாக்கை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையும் கூட. இந்தக் கட்டத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வாய்திறக்கத் தவறுமேயானால் வரலாற்றுப் பழி அவர்கள் மீது சுமத்தப்படும்.

அதற்கு அவர்களே துணை போனவர்களுமாவார்கள்.

– என். கண்ணன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*