தொடர்கள்

வலிசுமந்த பதிவுகள்- 08 (சோகம்)

vp08

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுவதோடு வித்துடல்கள் கிடைக்கப் பெறாதவர்களின் நினைவாக நினைவுக்கற்கள் நாட்டப்பட்டு புனிதமான வணக்கத்திற்குரிய இடங்களாக மாவீரர் துயிலும் இல்லங்களே விளங்கியது. தாயகத்தில் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட தமிழீழத்தாயகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்றிருந்தன. 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் சிங்களப்பேரினவாதப்படைகளுடன் மீண்டும் நான்காவது கட்ட ஈழப்போர் மூண்டபின்னர் குறுகிய காலத்திலேயே கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்றிருந்த மாவீரர்துயிலும் இல்லங்கள் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியது. யாழ்hழ்குடாநாட்டிலும் வவுனியாவிலும் 2005-ம்ஆண்டு பிற்பகுதியில் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் வெளியேறியதையடுத்து அந்தத் துயிலுமில்லங்களின் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 07 (சலிப்பு)

vp07

வலிசுமந்த தடங்களை பதிவாக்குகின்றபோதுதான் கடந்த பதிவுகளில் தவறவிடப்பட்ட விடயங்கள் சிலவும் நினைவுக்கு வருகின்றன. கடந்த பதிவுகளில் பதியப்பட்டிருக்க வேண்டிய சம்பவங்களை மீள மனக்கண் முன்நிறுத்தி இயன்றவரை வரிகளாக்கி ஏழாவது பதிவாக இங்கு பதிவாக்கியிருக்கின்றேன்.  2009-ம்ஆண்டு பெப்ரவரிமாதம் 01-02 ம் திகதிகளில் விடுதலைப்புலிகள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நிலைகொண்டிருந்த கேப்பாப்புலவு முள்ளியவளை நோக்கியதாக ஒரு பாரிய வலிந்ததாக்குதலை மேற்கொண்டனர். இந்த வலிந்ததாக்குதல் தொடக்கத்தில் விடுதலைப்புலிகளுக்கு வெற்றிகளைக் குவித்திருந்தாலும் அந்த வெற்றிக்களிப்பு நீண்டநேரம் நீடிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக புலிகள் தாக்குதலை மேற்கொண்டதனால் ஆரம்பத்தில் படையினர் ஆடித்தான்போனார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 45

nkna

அன்று ஆழியான் தலைமையிலான கடற்புலிகளின் சிறப்புப் படையணி களத்தில் இறங்கியது. அவர்கள் அந்தக் கடலை அங்குலமங்குலமாக அறிந்து வைத்திருந்தபடியால் ஆழங்குறைந்த கடல் பகுதியிலும் ஆங்காங்கே உள்ள ஆழமான குறுகிய ஓடைகளால் பீரங்கிப் படகுகளை நகர்த்திச் சண்டையிட்டனர். ஆழியான் ஒரு சிறு குருவியில் ஏறி தாக்குதலை நடத்தியவாறே கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். கடற்படையினரின் டோறாக்கள் கடலின் ஆழமான பகுதியில் நின்றே தாக்குதலை நடத்தின. அருகருகாக இரு டோறாக்கள் மட்டுமே ஆழமான ஆறு போன்ற பகுதிகளில் நின்று சண்டையிட முடியும். ஏனைய இரு டோறாக்கள் ஏறக்குறைய முந்நூறு மீற்றர் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 06 (வடு)

vp06

அது 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப் பகுதி. அப்போது வன்னியில் அதுவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் அம்பலவன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய நான்கு கரையோரக் கிராமங்களைத் தவிர மற்றைய அனைத்து நிலப் பரப்புக்களிலும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் அகலக்கால் பதித்திருந்தனர். மேற்குறித்த நான்கு கிராமங்களிலும் நான்குலட்சம் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். மாத்தளனில் மாத்தளனையும் தெற்காக இரணைப்பாலையையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் அமைந்திருந்த இந்து மயானத்தோடு அரச படையினரின் முன்னரங்கப் பகுதி அமைந்திருந்தது. அம்பலவன் பொக்கணையில் பொக்கணையையும் ஆனந்தபுரத்தையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்)

vp05

சமாதானத் தேவதையாக ஆட்சிபீடம் ஏறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம். 1995-ம்ஆண்டின் பிற்பகுதியில் சூரியக்கதிர்-01 படை நடவடிக்கையையும் 1996-ம்ஆண்டின் முற்பகுதியில் சூரியக்கதிர்-02 படை நடவடிக்கையையும் யாழ் குடாநாட்டின்மீது கட்டவிழ்த்து விட்ட சந்திரிகா அரசு இலட்சக்கணக்கான மக்களை குடாநாட்டிலிலிருந்து கிளாலிக்கடல் நீரேரியூடாக வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு இடம்பெயரவைத்து மாபெரும் சனப்பெயர்வு அவலத்தையும் அரங்கேற்றியிருந்த பெருமையும் அம்மையாரையே சாரும். ஆனாலும் யாழ் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்த மக்களையும் ஆட்சி பீடத்திலிருந்த சந்திரிகா அரசு நிம்மதியாக வாழவிடவில்லை. ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

vp04

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன. இலங்கைத்தீவை எடுத்துக்கொள்வோமாயின் வடமாகாணத்தில் யாழ்மாவட்டம் வடமராட்சிவடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைநகரம் உள்ளிட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களும் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 03 (பரிவு)

vp03

அது 2009-ம்ஆண்டு மாசி மாதகாலப்பகுதி. இரவில் மாசி மாதத்திற்கேயுரிய பனிக்குளிரும் பகலில் பகலோனும் தன் பங்கிற்கு வெப்பத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்த காலம். வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்புப் போரின் ஆரம்பநாட்கள் அவை. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்ளைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம். இந்த நாட்களில்தான் அரசபடையினரின் கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வன்னியில் வாழ்ந்த நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 02 ( நட்பு)

vp02

அது 1999-ம்ஆண்டின் நடுப்பகுதி. சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பில் அகலக்கால் பதித்திருந்தகாலம். தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் சுயவிருப்பிலேயே தங்களை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்த காலமது. இவ்வாறு சுயமாகவே விடுதலைப்போராட்டத்தில் இணைந்த புதியவர்களை சிறந்த போராளிகளாகப் புடம்போடுவதற்காக அரவணைத்துக்கொண்டது முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை எழில்மிகுந்த முத்தையன் கட்டுக்கானகம். அப்போதுதான் றேகன் என்று பின்நாட்களில் நான் அவனையும் அவன் என்னையும் ஆழமாக நேசிக்கப்போகும் நண்பனான வேலரசன் அறிமுகமானான். அப்போது அவனுக்கு பதினைந்து வயது. சிறியஉருவம். மிடுக்கான தோற்றம். இவனைப் போலவே இவனையொத்த ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 01 ( பசி)

vp01

அது 2009-ம்ஆண்டு வைகாசி மாதத்தின் இரண்டாவது வாரம். காலைப்பொழுதின் பறவைகளின் கானங்கள் அப்போது கேட்பதில்லை. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டிருந்த மக்களின் துயர் அறிந்ததாலோ என்னவோ பறவைகளும் தமது கடமைகளை மறந்திருந்தன. போரின் உக்கிரத்தன்மை அந்தச் சீவராசிகளையும் பாதித்திருக்கவேண்டும். சேவல்களின் கூவல்களுக்கும் பறவைகளின் கீதங்களுக்கும் பதிலாக அரசபடையினரால் ஏவப்படுகின்ற எறிகணைகளின் அதிர்வொலிகளும் துப்பாக்கிவேட்டொலிகளும் மக்களின் மரணஓலங்களுமே கேடகின்ற பொழுதுகளாகவே அந்தநாட்களின் அனேகமான காலைப்பொழுதுகள் புலர்ந்தன. அன்றயகாலைப்பொழுதும் படையினரின் எறிகணைவீச்சுக்களின் அதிர்வுகளோடுதான் விடிந்தது. முதல்நாள் இரவுமுழுவதும் வானத்தில் பட்டாசுகள் வெடித்ததுபோலவே துப்பாக்கிரவைகள் வெடித்துக்கொண்டேயிருந்தன.தொடரான வேட்டுச்சத்தங்களால் தூக்கம் வரமறுத்தது. பங்கருக்குள் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44

bookebaylow

மிகச் சிரமப்பட்டு நடந்து வந்த பெருமாள் அப்படியே முற்றத்தில் இருந்துவிட்டார். அவர் தாங்க முடியாத களைப்பில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். இரு கரங்களையும் பின்புறமாக ஊன்றியவாறு, முகத்தை வானத்தை நோக்கி வைத்தவாறு வாயைத் திறந்து கடும் முயற்சியுடன் சுவாசித்துக்கொண்டார். தகப்பன் வருவதைக் கண்டதும் குடிசையை விட்டு வெளியே வந்த முத்தம்மா அவரருகில் சென்று குந்தியவாறு, “என்னப்பா – என்ன செய்யுது?” எனக் கேட்டாள். “ம்.. கொஞ்சத் தூரம் நடந்தது.. தாங்க ஏலாமல் களைக்குது”, எனத் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தார் அவர். நிலைமையப் புரிந்து ...

Read More »