சமகாலப்பார்வை

தடம் மாறும் கூட்டமைப்பும் உதாசீனப்படுத்தப்படும் உணர்வுகளும்!

உதாசீனப்படுத்தப்படும்

கொழும்பில் இடம்பெற்ற 68ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பெருமையுடன் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி  அங்கு தமிழில் தேசிய கீதம் பாடியமை ஒரு முன்னேற்றகரமான விடயம் எனப் பாராட்டியுள்ளார். அங்கு தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்த படையினரைப் பாராட்டியதுடன், இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே ஐ.நாவின் பரிந்துரைகளுக்கு அமைவான போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவர் போரில் உயிரிழந்த, பங்குகொண்ட படையினரைக் கௌரவிப்பதை எவரும் தவறு எனக்கொள்ள முடியாது. ...

Read More »

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

makkal-peravai

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற ...

Read More »

கூட்டமைப்பின் சறுக்கல்களும் பேரவையின் உருவாக்கமும்!

tpc

கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் அரசியல் பெருவெளியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஓர் குறிப்பிடத்தக்க நிகழ்வு இது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஓர் மாற்று அரசியல் சக்தியாக இது  உருவாகும் எனவும் இதனை நோக்குபவர்களும் உண்டு. அதேநேரம் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு நிகழ்வு ...

Read More »

சர்ச்சைக்குள் சிக்கிய லண்டன் பேச்சுக்கள்! (சமகாலப்பார்வை)

leader

அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலகத்தமிழர் பேரவையினர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வே தரப்பினர் ஆகியோருக்கிடையில் லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவை மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதால் பல்வேறு ஊகங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இப் பேச்சுக்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெற வாய்ப்பளித்துவிடும் என்ற தனது கண்டனத்தை வெளியிட்டார். ...

Read More »

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை!

leader

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கிராமத்தில் 4 கோடி ரூபா செலவில் ஒரு பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படும் ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத்தலத்தை அமைப்பதை எவரும் பிழையென்று சொல்லிவிட முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் ஒரு வழிபாட்டுத்தலம் வழிபாடு தவிர்ந்த வேறு எந்த ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு விட முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் ஒரு வழிபாட்டுத்தலம் வழிபாடு தவிர்ந்த வேறு எந்த ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டாலும் ...

Read More »

பூனை பெற்ற புலிக்குட்டி : கேட்ட செய்தியும், கண்ட கனவும்!

leader

கேட்ட செய்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விகாரையொன்றில் வழிபாடுகளை முடித்துக் விட்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது வடக்கிலும், கிழக்கிலும் சட்டம் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாக நடக்கும் மக்கள் ஆர்பாட்டங்களைப் போலவே புலிகள் இயக்கத்தினரின் ஆரம்ப சம்பவங்கள் இடம்பெற்றன எனவும், தான் போராடி தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்படுகின்றது எனவும் கவலை தெரிவித்துள்ளார். அவரின் வழமையான வார்த்தைகளில் சொல்வதானால் மைத்திரியின் ஆட்சியில் புலிகளின் மீள் எழுச்சி ஆரம்பமாகி விட்டது என்பதாகும். மேலும் ...

Read More »

தொடரும் படுகொலைகளில் பதினெட்டு வயது மாணவி!

vithya

கடந்த வாரம் க.பொ.த உயா்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி வித்தியா படுபயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காலையில் பாடசாலை சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் தேடப்பட்ட போது அவா் ஒரு பாழடைந்த காட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டார். இரு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், இரு கால்களும் இருபக்கமாக இழுத்து இரு மரக்கட்டைகளில் கட்டப்பட்டும் சீருடை இரத்தம் தோய்ந்துமிருக்க அவரது சடலம் காணப்பட்டது. அவா் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இக்கொலை தொடா்பாக ஒன்பது போ் கைது ...

Read More »

வடக்கில் ரணிலின் அதிரடி விஜயமும் ‘விக்கி’க்கு எதிரான வியூகங்களும்

leader

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடமாகாணத்துக்கான விஜயம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. ஒன்று: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பகைத்துக்கொண்டு அவருக்குப் போட்டியான நிர்வாகம் ஒன்றை வடக்கில் ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றாரா? இரண்டு: வடக்கில் அவர் மேற்கொண்ட விஜயம் பிரதமர் என்ற ரீதியானதா அல்லது ஐ.தே.க. தலைவர் என்ற முறையில் தேர்தலை இலக்காகக்கொண்டதா? வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் எந்தவொரு அரசாங்கத் தலைவரும் வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதென்பது வெறுமனே சம்பிரதாயபூர்வமானது மட்டுமல்ல. வடக்கு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமன்றி, அதற்கான தீர்வை முன்வைப்பதற்கும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவது ...

Read More »

அச்சுறுத்தும் மகிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரியின் தேசிய அரசாங்கமும்

maithripala and mahinda

இலங்கை அரசியல் அண்மைக் காலத்ததில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சந்தித்து வருகின்றது. அந்த மாற்றங்களுள் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட “தேசிய அரசாங்கம்” எனக் குறிப்பிலாம். கடந்த வாரம் இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லியிருந்தார். மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியும் அதுதான். இருந்தபோதிலும் மிகவும் குறுகிய கால அறிவித்தலுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அல்லது அவசியம் அரசாங்கத்துக்கு ...

Read More »

கூட்டமைப்புத் தலைமையை குழப்பும் விக்கினேஸ்வரனின் அதிரடி நகர்வுகள்

vig-sam

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின்றது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்குக் ...

Read More »