சமகாலப்பார்வை

எலும்புக்கூடுகளின் வாக்குமூலம் – மாரீசன்!

goth-1024x682

இப்போதெல்லாம் எலும்புக்கூடுகள் பேச ஆரம்பித்துவிட்டன. மனிதக் குரல்கள் அடக்கியொடுக்கப்படும் அகோர நாட்களில் நியாயத்தின் குரலாக, உண்மையின் குரலாக மறைக்கப்பட்ட அநியாயங்களைக் கேள்விகளால் அம்பலப்படுத்தும் குரலாக எலும்புக்கூடுகள் மண்ணைப் பிளந்து கொண்டு எழுந்து நிற்கின்றன.அண்மையில் புத்தூர் வாதரவத்தையில் இராணுவக் காவலரண் ஒன்று அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் ஒரு பற்றைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தலைமுடியும் அருகே கிடந்த ஆபரணங்களும் ஆடைகளும் மூலமாக அந்த எலும்புக்கூடு தான் ஒரு பெண் என்பதை சொல்லிவிட்டது. அது மட்டுமல்ல அது கிடந்த இடத்தினூடாக உரும்பிராயில் ராஜிக்கு எனன் ...

Read More »

உரிமைகளா? பதவிகளா? – மாரீசன்

sampanthan-4-1024x682

வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் களம் சூடேறிவிட்டது.  ஒருபுறம் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றினால் தனிநாடு அமைப்பதற்கான அத்திவாரமாக அமைந்துவிடும் என்பது சிங்களக் கடும் போக்குவாதிகளன் பிரசாரம்! மறுபுறும் வடமாகாண சபையின் முதலமைச்சராக, தான் தெரிவு செய்யப்பட்டால் 13வது திருத்தச் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட முழுமையான அதிகாரங்களுடன் ஆட்சி நடத்தப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சூளுரை! இன்னொருபுறம் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன தனித்தனியாக குழுக்களை வடமாகாண சபைத் தேர்தலில் நிறுத்தப்போவதாக அறிவிப்பு! இப்படி ...

Read More »

ஊருக்கே உபதேசம் உனக்கில்லை; புத்தகாயாவும் இலங்கையும்!

leader

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புனித போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவில் ஒரு தொடர்வெடி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐம்பத்தியொரு நாடுகளின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நேபாள ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் திபெத் நாட்டின் ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள 60 அடி உயர புத்தர் சிலையின் அருகே ஒரு குண்டுமாக 9 குண்டுகள் வெடித்துள்ளன.இதில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளையும் சேர்ந்த ஒரு பிக்குவும் ஒரு யாத்திரீகருமாக இருவர் காயமடைந்துள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக ...

Read More »

மேடையில் ஆடும் 13வது திருத்தச் சட்டம்!

mahinda-raja

இன்று இலங்கையில் எங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றியே பேச்சு! இது அரசியலமைப்பின் ஒரு திருத்தச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அது பிறந்த போது கிடைக்காத பரபரப்பும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது. ஆட்சி பீடத்திலுள்ள கட்சிகளிடையெ கருத்துக்கள் வெடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திரமுன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பன 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழீழம் அமைவதற்கு அடித்தளமாகிவிடும் எனத் துள்ளிக்குதிக்கின்றன. இடதுசாரிகள், முஸ்லிம்காங்கிரஸ் ஆகியன 13வது திருத்தச் சட்டத்தில் ...

Read More »

மாகாண சபைத் தேர்தலும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்!

leader

பல வருடங்களாக நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு மஹிந்த அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமாக தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக எவ்வித அறிவித்தலும் வெளியிடப்பட்டிராத போதிலும் பல்வேறு தரப்பினராலும் தேர்தல் தொடர்பான ஒரு வித வெப்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட்ட பல இனவெறி அமைப்புக்களாலும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிகப்படாமல் தேர்தல் ...

Read More »

‘மே 18’ – மகாவம்சக் கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

leader

வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த ஆழி நீர்ப்பரப்பும் தன் அலைக் கரங்களை ஒடுக்கிவிட்டு விம்மி விம்மித் தணிகிறது. பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்கள்: காணுமிடமெங்கும் குறை உயிரில் முனகும் ஜீவன்கள்; எரிந்து கருகிய கூடாரங்கள்; இடிந்து சிதைந்த குடியிருப்புக்கள்; சிதறிக் கிடக்கும் ஆடைகள்; பாவனைப் பொருட்கள். ஒரு புறம் இறந்து கிடக்கும் உடல்கள் மீதும், இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேலும் இரக்கமின்றி ஏறி ஓடும் இராணுவத்தினரின் உழவு இயந்திரங்கள்; மறுபுறம் ...

Read More »