தாயக விடுதலைப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு அவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றமை தொடர்பிலான தெளிவினை தமிழ் மக்கள் பெற்றிருக்க வேண்டிய புறச்சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வடக்கின் வசந்தம், ஆசியாவின் அதிசயம் என சர்வதேச மட்டத்தில் போலிப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற அரசாங்கம் தாயகத்தில் இருக்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்யவில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் ...
Read More »ஆசிரியப்பார்வை
மீள்குடியேற்றப் போர்வையில் மரணப் பொறிக்குள் தள்ளப்படும் வன்னி மக்கள்!
இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது. அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் பெரிய அளவில் வெளிவரவில்லை. ...
Read More »பதவிக்காக மாரடிக்கும் ‘கலைஞரின் கூட்டம்’ தமிழினத்தின் விடிவெள்ளியைக் குற்றம் சொல்வதா?
கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனது ஆதரவுத்தளத்தை மீளக்கட்டியெழுப்ப ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுத்திருக்கிறார். எத்தனையோ பேர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுக்கவில்லையா? கலைஞர் கையில் எடுத்திருப்பதுதான் தப்பானதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் தனது குடும்ப நலனுக்காக இனத்தையே காவு கொடுத்த கலைஞரின் பரிவாரங்கள் உலகெங்கும் தமிழினத்தின் முகவரியாக கொள்ளப்படுகின்ற தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி மகிந்த ராஜபக்சவை விடவும் கொரூரமான ஒருவராகச் சித்தரித்து கருத்து வெளியிட்டிருப்பது தமிழின உணர்வாளர்களை கொதிப்படைய வைத்திருக்கின்றது. அதிகாரத்திற்காகவும், ...
Read More »சம்பந்தன்,வித்தி குழுவால் பழிவாங்கப்பட்ட வீரகேசரி ஆசிரியர்!
தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தினை தற்போது தோளில் சுமந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தனது நோக்கத்தினைக் கைவிட்டு கதிரைக் கனவுக்காக போராடுகிறதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் செய்படத் தலைப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னான தமிழ் மக்களுக்கிடையிலான பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்திப் பயணிக்கவேண்டும் என்பதே உண்மையாக தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் அவாவாகும். ஆனாலும் தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஒரு சிலர் தமது நோக்கத்தினை கைவிட்டு கட்சி அரசியல் செய்யவும் ...
Read More »ஒரே(டெசோ) மேடையில் இரண்டு கலைஞர்கள்!
ஈழத்தமிழன் சிந்திய இரத்தமும் கொடுத்த விலைகளும் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணங்களாய் இன்னமும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இத்தனைக்குப் பின்னும் ஈழத்தமிழர்களின் அளவிட முடியா அர்ப்பணிப்புக்களின் மேல் நின்று வயிறு வளர்க்கும் தலைமைகளும் எமது இனத்தின் மத்தியில் இருப்பதனைத்தான் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட தாயகத்திற்கான விடுதலைப் போராட்டத்தினை அதே வழியில் வெற்றி கொள்ள முடியாது என்பதால் தான் இளைஞர்களின் கைகளுக்கு போராட்டம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விளைவு தான் இன்று தமிழன் என்றொரு இனம் உண்டு என்று சர்வதேசத்தினைத் திரும்பிப் பார்க்க ...
Read More »