பார்வைகள்

தமிழக மாணவர் எழுச்சியும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும்!

leader

மிகப்பெரிய எழுச்சியின் வடிவமாக தமிழகம் திரண்டிருக்கிறது. இனம் ஒன்றின் விடுதலைக்கான இறுதி எழுச்சியாக மாணவர் சக்தி நிமிர்ந்தெழுந்த சம்பவங்கள் பல்வேறு விடியல் பெற்ற தேசங்களில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழினத்திற்காக உரிமையுடன் திரண்டெழுந்தது தமிழக மாணவர் சமூகம். தமிழகத்தின் எழுச்சி குறிப்பாக தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சி மத்திய பிராந்தியத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக வீரியம் பெற்றுவிடும் நிலையை அடைவதற்கு முன்பாகவே அதனை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது முதல் போராட்ட அமைப்புக்களுக்கு ...

Read More »

எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!

layolastudentshungerstrike

மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத துப்பாக்கி முனைக்குள் முடங்கியுள்ளனர். ஆற்றாமை, பரிதவிப்பு, வேதனை அனைத்தையும் சுமந்து வாழும் ஈழத் தமிழ் சமூகம் தனக்கான நியாயத்தினைப் பெறுவதற்காக வாய் கூடத் திறக்க முடியாத நிலையில் ஏங்கியே வாழ்கிறது. ஆனாலும் கூட ஈழத்தமிழனின் கண்ணீருக்காக இரத்திற்காக உலகத் தமிழினம் எழுச்சி கொண்டிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைத் ...

Read More »

சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!

leader

சூழ்ச்சிகள் மூலம் போரில் வென்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியாது என்பதை ஜெனீவாக் களம் பறைசாற்றியிருக்கின்றது. திட்டமிட்ட இன அழிப்பின் ஊடே போரில் வென்ற சிங்கள இனவாத அரசு முடிந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் முரண்நிலைகளைத் தோற்றுவித்து பிரிவினைகளை ஏற்படுத்தவும் முற்பட்டது. இருப்பினும் சரியான நேரத்தில் அனைவரும் ஒரு சேரப் பயணிப்போம் என்பதனை தமிழர் பிரதிநிதிகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கடந்த ஜெனீவாக் கூட்டத் தொடரின் போது அரச தரப்பினைச் சேர்ந்த சிறுபான்மை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஜெனீவா சென்று இனக்கொலைகளை நியாயப்படுத்தும் ...

Read More »

“புனிதர் சம்பந்தனின்” அரசியல் நகர்வுகள் யாருக்கானவை?

mahinda_sampanthan1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் ...

Read More »

உயிர் சிந்திய மாவீரப் பெருந்தகைகளின் நாளில் உறுதி கொள்வோம்!

nlote

உலக வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் பேரழிவினைச் சந்தித்த இனங்களில் ஒன்றாக தமிழினம் பதிவாகியிருக்கின்ற அதேவேளை அளவிட முடியாத தியாகங்களையும் செய்த ஒரு விடுதலை இயக்கத்தை தன்னகத்தே கொண்ட பெருமையும் தமிழினத்தையே சார்ந்திருக்கின்றது. மிகப் பெரிய, அளவிட்டுக்கூற முடியாத ஈகைகளைப் புரிந்த எமது விடுதலை வித்துக்களை நினைவுகூரும் நிமிர்வான நாள் இன்றைய நாள். கடந்தகாலங்களில் புனையப்பட்ட நூல்களிலும் ஆவணங்களிலும் வரலாறுகள் கற்பனைகள் ஊடே புனையப்பட்டிருக்கலாம். ஆனாலும் எமக்காக எமது மண்ணின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த அளிவிட முடியாத சிரஞ்சீவிகளின் இரத்தத்தால் தமிழினத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கின்றது. தேசியம் ...

Read More »

ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?

vikatandouglas

விகடனின் ”நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!”  என்ற தலைப்பில் கற்பனைகளை இட்டுக்கட்டி வடிவமைக்கப்பட்ட பேட்டி ஈபிடிபியைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டிருந்ததை தமிழ்லீடர் உட்பட பல தமிழ் தேசிய ஊடகங்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தன. ஆயினும் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் தமது செயலை நியாயப்படுத்தி பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார் . ஆனந்த விகடனின் ஆசிரியர் பதிலும் தமிழ்லீடரின் குறிப்பும் வருமாறு: விகடனின் ஆசிரியர் கட்டுரை ஈழம் – நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம். லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் ...

Read More »

முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!

av

தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் விகடனுக்கு அன்புகலந்த வணக்கம்! நொந்து போய் மீளமுடியாத அவலத்துள் வாழும் ஈழத்தமிழ் மக்களின் மனங்களுடன் உங்களை வணங்குகிறோம். இனவிடுதலைப் போர் தொடர்பிலான நியாயங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சென்ற தமிழக ஊடகங்களில் பிரதான பங்கைப் பெறத்தக்க வகையில் செயற்பட்ட உங்களது சஞ்சிகையில் அண்மையில் வெளிவந்த ஆக்கம் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சடைய வைத்திருக்கிறது. உங்கள் தனித்துவத்துடன், புதிய, புதுமையான விடயங்களை சுவாரஸ்யமாக வெளியிட்டு வரும் நீங்கள் தமிழகத்தின் ஏனைய சஞ்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறீர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ...

Read More »

புலத்து மக்களுக்கு அறிவுரை சொல்லும் சீமானுக்கு திறந்த மடல் !

Seeman

தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்! தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது ...

Read More »

முன்னாள் போராளிகளுக்கு அளிக்கப்படுவது புனர்வாழ்வா?

leader

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றன. அதற்கான நிகழ்வுகளும் விருந்துபசாரங்களும் பெருமளவில் நடந்தேறியிருக்கின்றன. ஆனாலும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு என்பது எந்த அளவிற்கு உண்மையானதாக இருகின்றது என்ற கேள்விக்கான பதிலைத் தேடித்தான் பார்க்கவேண்டும். வன்னியின் இறுதிப் போரின் போது சரணைந்து போரின் பின்னர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதான முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுவருன்றனர். அவர்களில் குடும்பத்தலைவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விடுதலைகள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தொழில்த்துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கான எந்தவிதமான உதவியினையும் இலங்கை அரசாங்கம் ...

Read More »

இராணுவத்தை எதிர்த்து மீண்டும் நிரூபித்த முல்லை மண்!

leader

தமிழர் தாயகத்தின் மீதான சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் அவை தொடர்பில் கேள்வி எழுப்பியர்களை இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கமுற்பட்ட சம்பவம் ஒன்றும் அதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமும் முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பெறக்கூடிய அனைத்து வளங்களையும் வாரிச்சுருட்டிக்கட்டிக் கொண்டு தென்னிலங்கைக்கு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கமும் இராணுவமும் பெரும்பான்மை இன மக்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்கு உதாரணமாக முக்கியமான போக்குவரத்து வீதிகள், வழிபாட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ...

Read More »