பார்வைகள்

‘சினிமா மோகம்’; ஆபத்தை நோக்கி தமிழ்ச்சமூகம்!?

Jaffna-leader

மன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இடைவிடாது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தொடர்பிலான செய்திகளும் இலத்திரனியல் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. பல்லாயிரம் உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட இனவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற ஒரு மண்ணில் உலகத்தமிழர்களுக்கான ஒரு அடையாளமாக விளங்குகின்ற யாழ்ப்பாணத்து மண்ணில் திரைப்படம் ஒன்றிற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையும் அதற்கு ஆதரவாக சிலர் கருத்துச் சொல்ல முற்படுகின்றமையும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையைத் தோற்றுவித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முற்பட்ட ...

Read More »

சம்பந்த(ன்) – மஹிந்த விருந்துபசாரத்துடன் முடிவுக்கு வருகிறதா இரணைமடு விவகாரம்?!

sampanthan-sumanthiran2

‘இரணைமடு” தமிழ் மக்களின் வாழ்வுரிமையில் இன்று பிரதான பாத்திரத்துக்கு வந்திருக்கிறது. இரணைமடு விடயத்தில் சம்பந்தப்பட்ட மக்களை விடவும் அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவே அண்மைய நடவடிக்கைகள் புலப்படுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்ததுடன் மாவிலாற்றினை மறித்ததால் போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்ததையும் மறைமுகமாக சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் இரணைமடு விடயத்தினை அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக பார்ப்பதன் பின்னணி ஏதாவது இருக்கவேண்டுமே என்பது பட்டவர்த்தனமான ...

Read More »

புரட்சித் தலைவனுக்கு விடை கொடுப்போம்…!

mandela2

“உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கலகக்காரர்கள் எனவும் அவர்கள் வாழ்நாளில் பிற்போக்காளர்களால் தூற்றப்படுகின்றனர். ஆனால் அதே சக்திகள் புரட்சிவாதிகளை அவர்களின் இறப்பின் பின்பு யேசுவாகவும், புத்தராகவும் காட்டி அஹிம்சாமூர்த்திகள் எனக் கூறி அவர்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முனைகின்றனர்” இவை உலகின் தலைசிறந்த புரட்சிவாதிகளில் ஒருவரும் உலகில் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசியலதிகாரத்தை நிறுவியவருமான மாமேதை லெனின் கூறிய வார்த்தைகள். தங்கள் வாழ்நாளில் திட்டித்தீர்க்கப்பட்ட விடுதலை வீரர்கள் அவர்களின் இறப்பின் பின்பு அவர்களின் வடிவங்கள் மாற்றப்பட்டு போற்றப்படுவது ...

Read More »

அன்ரன் பாலசிங்கம்; அரசியல் அரங்கத்தில் அண்ணனின் அறிவாயுதம்!

arasiyal arangathil aaa

“நீங்கள் எனது ஆலோசகராகவும், பிரபாகரன் எனது தளபதியாகவும் இருப்பீர்களானால் நான் இலங்கையை விரைவில் ஒரு வல்லரசாக உருவாக்கிவிடுவேன்” – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ – “எங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும், அரசியல் சாணக்கியமும் எங்கள் ஆற்றலுடன் ஒன்றுக்கொன்று துணையாக இளைய இலங்கையில் சிநேகபூர்வமான இரு வல்லரசுகள் தோன்றிவிடும்” -தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். – 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற ...

Read More »

சிங்களத்துக்காக ஆஜராகும் ‘சின்னக்கதிர்காமர்’ – மாரீசன்

sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பாக மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வகிக்கும் பங்களிப்புப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இவர் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக உரையாற்றினாரோ அல்லது இலங்கையின் இனவாத ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் குரலாக உரையாற்றினாரோ என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன. இவர் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனால் மிகப் ...

Read More »

விடுதலையின் அடையாளம் ‘மண்டேலா’ – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

mandela2

“இன ஒடுக்குமுறையாளர்கள் எம் மீது இழைத்த அநீதிகளை நாம் மன்னித்துவிட்டோம். ஆனால் அவற்றை நாம் என்றுமே மறக்கப்போவதில்லை” இது தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக கறுப்பின மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய நெல்சன் மண்டேலா அவர்கள் ஆற்றய சொற்பொழிவின் ஒரு பகுதி. இவை ஒரு பதவியேற்பின் போது வெளியிடப்பட்ட வெறும் அலங்கார வார்த்தைகளல்ல. மக்களுக்காகவும் தான் பிறந்த மண்ணுக்காகவும் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த ஒரு விடுதலைப் போராளியின் அடி இதயத்திலிருந்து வெளிவந்த இலட்சிய உறுதியும், பெருந்தன்மையும் கொண்ட சுதந்திரக்குரல். மன்னிப்பது மனித குலத்துக்குரிய பெருந்தன்மை. மறக்காமல் ...

Read More »

எதிரிகள் நினைப்பதை எம்மவர்களே செய்துவிட வேண்டாம்! – தமிழ்லீடர்

leader5

“எதிரிகள் நினைப்பதை எம்மவர்களே செய்துவிடவேண்டாம், எமது மக்களிடத்திலோ, எமது உணர்வாளர்களிடமோ பிரிவினையைத் தோற்றுவித்து அவர்களின் வீச்சுடன் கூடிய விடுதலைப் பயணத்தில் தளர்வினை ஏற்படுத்துவதும் எமது இனத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடியும்” என சென்னையில் வைகோ  கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழாவிற்கு  அறிமுகச் செய்தியில் தமிழ்லீடர் குழுமம் தெரிவித்துள்ளது. வைகோ, திருமுருகன், மணியரசன் உட்பட்ட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் நாவல் வெளியீட்டு விழாவில் தமிழ்லீடர் குழுமத்தின் அறிமுகச் செய்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர் ...

Read More »

சிங்களத்தைக் குற்றக்கூண்டில் நிறுத்திய புனிதர்கள்!

maaveerar2

அன்புக்கும் மதிப்புக்குமுரிய எமது இனிய தமிழ் உறவுகளே! இன்று மாவீரர் நாள்! எமது உதிரத்தில் கலந்துவிட்ட மாவீரர்களை மணியொலித்து, சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்து மனம் நெகிழும் நாள்! எமது விடுதலை வரலாற்றை ஒப்பற்ற பக்கங்களால் அலங்கரித்த எங்கள் மாவீரர்கள் எமது மண்ணின்விடுதலைக்காக தங்கள் விலை மதிப்பற்ற உயிர்களைத் தற்கொடை செய்து உயர்ந்து நிற்பவர்கள்! இவர்கள் கடந்து சென்ற பாதை மலர்கள் தூவிய நந்தவனமல்ல! புயலும் பெருமழையும், பூகம்பமும் அதிர்ந்த அலைகுண்டங்கள்! விடுதலை வேட்கை என்ற உன்னத இலட்சியத்தைக் கவசமாகக் கொண்டு இவர்கள் நெருப்பாறுகளை ...

Read More »

ஒரு வரலாற்று நாயகனின் பிறந்த நாள்!

leader (1)

எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மண்ணில் வந்த மகத்தான நாள்! இன்று எமது தலைவனுக்கு வயது 59 ஏறக்குறைய 40 வருடங்கள் மண்ணின் விடுதலையையும் தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் தன் மூச்சுக்காற்றாக்கி, தன் ஒவ்வொரு அசைவிலும் வீரம், தியாகம் என்னும் நெய் ஊற்றி அவன் ஏற்றி வைத்த விடுதலை வேட்ககை ஒளி இன்னும் எமது மக்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிகிறது – பெரும் காட்டுத்தீயாக! ஆம்! அது அணைக்க முடியாத இலட்சிய நெருப்பு! இலக்கு எட்டும்வரை மங்காது எரிந்து கொண்டெயிருக்கும். சிலர் வரலாற்றில் தமக்கென ...

Read More »

காணாமல் போனோர்; ‘வலி’ புரியுமா முரளிதரனுக்கு? – மாரீசன்!

murali

விளையாட்டுக்கள் மனங்களைப் பக்குவப்படுத்துகின்றன என்று சொல்வார்கள். அவை மனித மனங்களின் மனித நேயத்தை செழிப்படைய வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆடுகளத்தில் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து மோதும் இரு அணியினர் விளையாட்டு நிறைவு பெற்றதும், வென்றவர் தோற்றவர் என்ற பேதமின்றி கூடிக்களிப்பதும், விருந்துண்டு மகிழ்வதும் காலம் காலமாக பின்பற்றப்படும் வழமையாகும். அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் நட்புறவு தொடர்ந்து பேணப்படும். விளையாட்டுக்களால் மனப்பக்குவம் ஏற்படுகிறது என்று இதனால் தான் சொல்வதுண்டு. அங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருந்த போதிலும் ...

Read More »