பிரதான செய்திகள்

‘திருப்பி அடிக்­க­வேண்­டி­வரும்’ – மகிந்த எச்சரிக்கை!

mahinda

நாங்­களும் பொறுமை பொறுமை என்று பொறுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் எம்மை தள்­ளிக்­கொண்டே இருக்­கின்­றனர். தொடர்ச்­சி­யாக எம்மை தள்­ளிக்­கொண்­டே இருந்தால் நாங்களும் திருப்பி அடிக்­க­வேண்­டி­வரும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ   எச்சரித்துள்ளார். குரு­ணாகல் பகு­தியில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரையாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் எம்மை அடித்­தது போதும். இந்த இடத்தில் நான் விரும்­பாத சிலவற்றையும் கூற­வேண்­டி­யுள்­ளது. நாங்­களும் பொறுமை பொறுமை என்று பொறுத்துக்கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் எம்மை தள்­ளிக்­கொண்டே இருக்­கின்­றனர். தொடர்ச்­சி­யாக எம்மை தள்­ளிக்­கொண்­டி­ருந்தே இருந்தால் நாங்­களும் ...

Read More »

‘புத்திஜீவிகளைப்’ பயப்படுத்தும், ‘மக்கள்’ நிராகரித்த தமிழீழம் – சிறிதரன்

sri

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிறிதரன் தெரிவித்ததாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் ...

Read More »

சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா என்பதை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது – ஐதேக

kabir hashim

உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபிர் ஹாஷீம் தெரிவித்தார். உள்ளக பொறிமுறை விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் தெரிவித்திருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேட்டபோதே அமைச்சர் கபிர் ஹாஷீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு. எனவே ...

Read More »

பேரவை நிகழ்வில் முதல்வர் பங்கேற்க தடைபோட்டவர்கள் யார்? (விபரம்)

Itak

தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக்  கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 6 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன் அதில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு மக்களின்  சந்தேகங்களுக்கு விடையளிக்குமாறும் கோரியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண சபை அமைச்சர்கள் மூவர் உட்பட 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியதாகக் கூறி அக்கடிதம் ...

Read More »

சுதந்தின தின விழாவில் கூட்டமைப்பு பங்கேற்கும் –  சுமந்திரன்

suma

பெப்ரவரி 4ந்திகதி நடைபெறும் சிறிலங்கா சுதந்திரதின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வருட சுதந்திர தினத்திலும் தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் கலந்துகொண்டதாக தெரிவித்த சுமந்திரன் இவ்வருட சுதந்திர தின விழாவிலும் தாம் நிச்சயம் கலந்துகொள்வோம் எனத் தெரிவித்தார்.

Read More »

வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

humanRights_Commissioner

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதோடு முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் மதிப்பீடுகளை செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் ...

Read More »

எமது இனமானது சாதி, சமய, சமூக, பால், பிரதேச வேறுபாடற்ற சமுதாயமாக வேண்டும் – மருத்துவர் லக்ஸ்மன்

மருத்துவர் லக்ஸ்மன்

எமது இனமானது, சாதி, சமய, சமூக, பால், பிரதேச வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் அற்ற ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவையானது உறுதியாக இருக்கிறது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் அரசியல் தீர்வு முன்வரைபு தயாரிக்கப்பட்டு, மக்கள் முன் வைக்கப்பட்ட நேற்றைய (31-01-2016) நிகழ்வின்போது, இருதய சிகிச்சை நிபுணர் லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை : தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களில் மீண்டும் ...

Read More »

தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் – முதலமைச்சர் மன்றாட்டம்

tpc-proposal06

கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது. ஆனால் வடகிழக்குமாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வழி வழியாக வரவிருக்கும் எமது வாரிசுகளின் வருங்கால வாழ்க்கையே எமக்கு முக்கியம். அதற்காக எந்த ஒரு கடினமான பாதையில் பயணிக்கக்கூட நாங்கள் தயங்கக் கூடாது என வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் என்று யாவரிடமுந் தயவாகக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்த முதல்வர் இதுவரை காலமும் ...

Read More »

புதிய அரசியலமைப்புக்கு அடிப்படை, சிங்கள – தமிழ் தேசிய இன உடன்பாடு!

tpc-proposal05

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு செய்யப்பட வேண்டும். அந்த சமூக உடன்பாட்டின் மீதே அரசியல் அதிகாரங்களைப் பகிரும் புதிய அரசமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள  அரசியல் தீர்வுத் திட்ட யோசனையின் முன்வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அரசியல் தீர்வு முன்மொழிவு வரைபு இரண்டு பிரிவுகளாக அமைந்திருக்கும் எனத் தெரிகின்றது. இரண்டாவது பிரிவு அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்களை வலியுறுத்துகின்றது. முதல் பிரிவு பொது அம்சங்களை ...

Read More »

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் வெளியிட்ட தீர்வுத் திட்ட வரைபு

tpc-proposal01

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபை வடமாகாண முதலமைச்சர் கௌரவ விக்கினேஸ்வரன் அவர்கள்  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைத்தார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட  இந்நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் இணைத் தலைவர்களின் உரையைத் தொடர்ந்து தீர்வுத் திட்ட முன்வரைபை முதல்வரின் மாணவனும் அரசியல் உபகுழுவின் ஒருங்கிணைப்பாளருமான  சட்டத்தரணி புவிதரனிடமிருந்து முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி புவிதரன் அவர்கள் வரைபு தொடர்பான அறிமுக உரையாற்றினார். இறுதியாக ...

Read More »