பிரதான செய்திகள்

திங்கள் கிழமை யாழில் பேரணியும் கடையடைப்பும்!

S1-7

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More »

குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் எண்மர் கைது!

arrest3

வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில், மேலும் 8 பேரை வவுனியா பொலிஸார், நேற்று (08) கைது செய்துள்ளனர்.

Read More »

நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன் என்கிறார் மஹிந்த!

mahinda

எனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read More »

திருகோணமலை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

eastern-university-trinco

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடம், எதிர்வரும் 09ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, பீடாபதி குமுதுனி தேவி சந்திரகுமார் தெரிவித்தார்.

Read More »

தற்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை – சாலிய பீரிஸ்!

saliya

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. மீண்டும் விபரங்களை சேகரிப்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சலிப்படைய செய்யும். ஆகையினாலேயே நாம் தற்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை. அத்தோடு ஒருபோதும் மக்கள் அதிருப்தியடையும் வகையில் செயற்பட மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

Read More »

ஐ.தே.கவின் பிரதித் தவிசாளராக டி.எம்.சுவாமிநாதன்!

swaminathan

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நிரந்தரக் குழு!

viky

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி முன்னெடுப்பதற்கு நிரந்தரமான குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

வாக்குமூலம் வழங்கத் தயார் என்று மஹிந்த தெரிவிப்பு!

mahinda

ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையான சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்கு தான் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பு திருமலையில்!

kaanaamal aa

காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Read More »

தவராசாவின் கவலைக்கு தீர்வு கிடைத்தது! கையளிப்பாரா சீ.வீ.கே!

thavarasa1

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7000 ரூபாவை அவரிடம் ஒப்படைக்க உதவுமாறு வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More »