பிரதான செய்திகள்

நல்லாட்சியை அனுபவிக்காத தமிழர்கள் – மாவை ஒப்புதல் வாக்குமூலம்

maavai2

நாட்டில் நல்லாட்சி அரசு ஆட்சி நடாத்தி வந்தாலும், தமிழர்கள் இன்னமும் அதனை முழுமையாக அனுபவிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...

Read More »

போர்க்குற்றச்சாட்டுக்கள் எதுவும் இலங்கைக்கு எதிராக கிடையாது – ஜனாதிபதி

my3

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது என்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மட்டுமே இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அல்ஜசீரா செய்தி சேவையுடனான பேட்டியொன்றிலேயே ஜனாதிபதி சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சிவில் யுத்தம் தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளுடன் மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்துக்கள் முரண்படுவதாகத் தெரிவதாக அல்ஜசீர செய்தி வெளியிட்டுள்ளது. 26 வருட யுத்தத்தில் இரு தரப்புகளினாலும் ...

Read More »

பேரவை அறிக்கையை குழப்ப அவசரமாக கூடுகிறது தமிழரசுக்கட்சி!

Itak

தமிழ் மக்கள் பேரவை நாளை வெளியிடவுள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனை தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் அதனைக் குழப்பும் நோக்கில் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களை செயற்பாட்டில் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பணிப்பிற்கமைய அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை மாகாணசபை அலுவலத்தில் இன்று கூடுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5மணியளவில் கைதடியில் உள்ள மாகாணசபை அலுவலகத்தில் அவசர சந்திப்பு இருப்பதால் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடப்பட்டுள்ளதாக தமிழ்கிங்டம் இணையத் தளத்தின்   விசேட செய்தியாளர் ...

Read More »

உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர் – ரணில் வலியுறுத்து

ரணில்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடுகளை நிராகரிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சிப் பேட்டியில் தான் கூறவில்லை என்றும் ‘வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை , உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர்’ என்ற ஜனாதிபதியின் கருத்துடன் தான் உடன்படுவதாகவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது. நாம் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும், உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர் என்றும் கூறியிருந்தார். இந்த விடயத்தில் ...

Read More »

வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதாக அறிவிப்பு

maithiripala

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கரிநாளாக அனுஸ்டிப்பதாக ”கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கங்கள் அறிவித்துள்ளன. பெப்ரவரி 4 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் 68 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கூடிக் கலந்தாலோசித்து குறித்த முடிவை ...

Read More »

சமஸ்டி இல்லை, ஒற்றையாட்சிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு – ராஜித

rajitha

ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவோம். சமஷ்டி என்ற கோட்பாட்டில் நாட்டை பிளவுபடுத்த முடியாது. புதிய ஆட்சியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதிகாரப்பகிர்வு என்பது அவசியமான ஒன்றாகும். இத்தனை காலமாக அதிகாரபகிர்வு விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்புகளை மேற்கொண்டமை நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இப்போதும் இந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்தால் தொடர்ந்தும் நாட்டில் சிக்கல்கள் தான் ஏற்படும். எனவே பொருத்தமான வகையில் அனைத்து ...

Read More »

இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது மாயை – பரணகம

Maxwell

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும் என பலர் எம்மிடம் வினவுகின்றனர். ஆனால் அடுத்த கட்ட அமர்வுகளை நடத்துவதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதை அறிவிக்கின்றோம். நாங்கள் அண்மையில் ...

Read More »

நல்லிணக்க, பொறுப்புக் கூறல் பொறிமுறை மே மாதத்தில் தயாராகிவிடும் என்கிறார் ரணில்

ranil

நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறலுக்குமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மே மாதமளவில், ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவாவில் சந்திக்கும் போது, இலங்கையின் முன்மொழிவுகள் தயாராக இருக்குமெனத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து இவ்வளவு நாட்களாகியும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பொறுப்புக் கூறல் பொறிமுறையில், சர்வதேசப் பங்களிப்பு இருக்காது எனவும் அதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால ...

Read More »

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வடமாகாண சபையில் குழு

Northern Province

புதிய அரசியலமைப்பு தேவை என்ற முன்மொழிவு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாலும் இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு யாப்புக்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும் புதிய அரசியலமைப்பில் முன்வைக்கப்படவேண்டிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவென வடக்குமாகாண சபையால் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 44 ஆவது அமர்வு புதன்கிழமை (27-01-2016) கைதடியில் அமைந்துள்ள வடக்குமாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்குறித்த விடயங்கள் அடங்கிய பிரேரணை வடமாகாண சபை அவைத்தலைவரால் கொண்டுவரப்பட்டது.புதிய ...

Read More »

ஈழத்துக் கவிஞர் இருவருக்கு ‘கவிஞர்கள் திருநாள்’ விருதுடன் 1 இலட்சம் இந்தியரூபா பணப்பரிசு – கவிப்பேரரசு வைரமுத்து

IMG_8057

வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார். இன்று (24-01-2016 ) காலை 10.30 மணியளவில் யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு ...

Read More »