பிரதான செய்திகள்

இலங்கை பயணிக்கும் வடகொரியர்களுக்கு நெருக்கடி!

north korea

இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

சிவகரனுக்கு கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவில் விசாரணைக்கு அழைப்பாணை!

sivakaran

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

அரசியலமைப்பு சபை மூன்று நாட்களுக்கு கூடுமாம்!

ranil - maithree

புதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக இன்று அலரி மாளிகையில் கொழும்பு மாநாகர சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற 39 இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

வித்தியா கொலைவழக்கு; குற்றவாளிகள் எழுவருக்கு மரணதண்டனை!!

breaking-news-1-10

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பிலான கொலைவழக்கில் இறுதித்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் தவிர்ந்த சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் சற்று முன்னர் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Read More »

வித்தியா கொலைவழக்கு; இறுதித் தீர்ப்புக்காக தயாராகியது நீதிமன்று!

vithiya

வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.

Read More »

லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு! (காணொலி)

thileepan

இந்திய வல்லாதிக்க படைகளுக்கு எதிராக நல்லூரின் வீதியில் பன்னிரு நாட்கள் உண்ணா நோன்பிருந்து தியாகச் சாவடைந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

Read More »

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தர உலக நாடுகளைக் கோரினார் – இயக்குநர் வ.கவுதமன்

kowthaman

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தர உலக நாடுகள் உதவ வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இயக்குநர் வ.கவுதமன் வேண்டுகோள் விடுத்தார்.

Read More »

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு நாமல் பாராட்டு!

namal-rajapaksa

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் வியா­ழேந்­திரன் ஆகியோர் கொள்­கையில் உறு­தி­யாக இருப்­பதால் கட்­சி­பே­த­மின்றி தனது பாராட்­டுக்­களை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக நாமல் ராஜ­பக் ஷ எம்.பி தெரி­வித்­துள்ளார்.

Read More »

திருமலையில் மற்றொரு நிலத்தடி சித்திரவதைக் கூடம் தொடர்பிலான தகவல் அம்பலம்!!

blogger-image--1326023508

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர் பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த புதிய சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Read More »

தமிழ்த்தலைமைகளை புகழ்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

ruban

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒற்றை ஆட்சிக்குள் அதிகார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்கின்றதே தவிர பிரிவினையினை ஒருபோதும் தூண்டவில்லை. தமிழ் தலைமைகளின் பெருந்தன்மையினை சிங்கள தலைமைகள் சிந்தித்துப்பாருங்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

Read More »