லீடர்லீக்ஸ்

உடைந்தது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு?

jtk

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனிடையே ஜனநாயக ...

Read More »

சிக்கலுக்குள் சிக்கியது அமைச்சர்களா? முதலமைச்சரா? (ஆசிரியப்பார்வை)

newe2

தமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது. ஆனாலும், ...

Read More »

“ஐங்கரநேசன்” அறிக்கை சொல்வது என்ன?

ay4

அமைச்சர்கள் முறைகேடாக நடப்பதாகத் தெரிவித்து மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய விசாரணைக்குழு ஒன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமைத்திருந்தார். குறித்த விசாரணைக்குழுவினால் இறுதி செய்யப்பட்ட அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது வடக்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் அமைச்சர்கள் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி நீக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கின்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை இணைக்கப்பட்டுள்ளன.

Read More »

குற்றவாளியா குருகுலராஜா?

kurukularaja

வடக்கு மாகாண அமைச்சர்கள் பதவி நீக்கப் பரிந்துரை தொடர்பில் விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சர்ச்சை தொடர்கிறது. குறித்த அறிக்கை தமிழ்லீடர் இணையத்தள ஆசியர் பீடத்திற்குத் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையினையும் வாசகர்கள் எமது இணையத்தில் பார்வையிடலாம். கல்வி அமைச்சர் குருகுலராஜா தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், சாட்சியங்கள் மற்றும் குழுவின் முடிவு என்பன உள்ளடங்கியதான அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Read More »

சத்தியலிங்கம், டெனீஸ்வரன் தப்பியது எப்படி?

sd

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வடக்குமாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணைக்குழு அறிக்கையினை முதலமைச்சரிடம் கையளித்திருந்தது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் இருவர் குற்றமற்றவர்கள் என்றும் அமைச்சர் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பதவி விலக பரிந்துரைப்பதாக குழு அறிக்கை அமைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விசாரணைக்குழு இறுதி செய்திருந்த அறிக்கை முழுமையாக தமிழ்லீடர் இணைய ஆசியர் பீடத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கையினையும் வாசகர்கள் எமது இணையத்தில் பார்வையிடலாம்.

Read More »

வடமாகாண சபை அமைச்சர்கள்மீதான விசாரணை அறிக்கை (முழுவடிவம்)

Northern_Province_Sri_Lanka_emblem

வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணைக்குழு அறிக்கையினை முதலமைச்சரிடம் கையளித்திருந்தது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் இருவர் குற்றமற்றவர்கள் என்றும் அமைச்சர் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பதவி விலக பரிந்துரைப்பதாக குழு அறிக்கை அமைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விசாரணைக்குழு இறுதி செய்திருந்த அறிக்கை முழுமையாக தமிழ்லீடர் இணைய ஆசியர் பீடத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கை உங்கள் பார்வைக்கு வடமாகாண சபை விசாரணை அறிக்கை (01) -விதிமுறைக் குறிப்பு, விசாரணை முறை  வடமாகாண சபை விசாரணை ...

Read More »

தனிநபரை பலிக்கடாவாக்கி தப்ப முயலும் கூட்டமைப்பு!?

tna

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரத்தை குழந்தைகளுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டுவது போல திசைதிருப்ப முற்பட்டிருக்கிறது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அந்த விவகாரத்தை மூடிமறைப்பதற்கு தங்களாலான விசுவாத்தைக் காட்டவும் முற்பட்டிருக்கின்றன யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் சிலவும்.

Read More »

முள்ளிவாய்க்கால் மண்ணில் மூக்குடைபட்ட சம்பந்தன்; நடந்தது என்ன?

sam

இறுதிப்போரில் பலிகொள்ளப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. முன்னதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு இணங்க ஆயிரக்கணக்கான மக்களுடன் நிகழ்வு இன்று முற்பகல் தொடங்கியது நிகழ்விற்கு முல்லைமாவட்ட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தலைமைதாங்கியிருந்தார்.

Read More »

வன்முறைக் கலாச்சாரப் பின்னணி உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ? – சுமந்திரனின் சீடர் சுகிர்தரன்

nanpenda thurogam

இதுவரை வன்முறை கலாசாரம் இல்லாத கட்சிகளாக இலங்கைத் தமிழரசு கட்சியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மட்டுமே உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும் சுமந்திரனின் சீடர்களிலும் ஒருவருமான சுகிர்தரன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ள மாகாண சபை உறுப்பினர் சுகிர்தரன் அவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வன்முறைக் கலாச்சாரப் பின்னணி உள்ள கட்சி என்பதை தனது குரு சுமந்திரனின் பாணியில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் சமயங்களில் தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளனாகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் சுகிர்தரன் ...

Read More »