வலிசுமந்த பதிவுகள்

வலிசுமந்த பதிவுகள்- 13 (வெறுமை)

vp13

18-05-2009 அன்றையநாட்பொழுதும் புலர்ந்தது. காலையிலேயே கதிரவன் தனது கடமையை நிறைவாகச்செய்யத் தொடங்கியிருந்தான். நாங்களும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற உடற்சோதனைகளுக்குச் செல்வதற்கான வரிசையில் சேர்ந்துகொண்டோம். அந்த மக்களின் வரிசை மிகவும் நீண்டிருந்தது. நாங்கள் பின்வரிசையிலேயே நின்றிருந்தோம். எறும்புக்கூட்டம் நகர்கின்ற வேகத்திலும் குறைவான வேகத்திலேயே இந்த மக்கள்வரிசை நகர்ந்துகொண்டிருந்தது. கதிரவனும் எம்மக்கள்மீது கருணைகாட்டவில்லை. தனது வெப்பக்கதிர்களை பாரெங்கும் அள்ளிவீசினான். அந்த முல்லைத்தீவுக்கரைச்சிவெட்டையில் எங்காவது ஒருசிறுநிழல்கூடக்கிடைக்காதா என்று எனது மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் அவதானித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வெப்பமிகுதியால் உடலெங்கும் வியர்த்தொழுகியதோடு நாவு தொண்டை வரண்டு தண்ணீர்த்தாகம் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 12 (தோல்வி)

vp12

2009-ம்ஆண்டு மேமாதம் 16-ம்நாள் மாலைவேளயில் சுமார் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யுத்தவலயமான வெள்ளாம்முள்ளிவாய்க்கால்ப்பகுதியிலிருந்து முதற்தடவையாக வட்டுவாகல் வழியாக முல்லைத்தீவிற்குச் சென்று அரசபடையினரிடம் சரணடைந்தார்கள். எதிர்பார்த்த தொகையைவிட மக்கள் அதிகப்படியாக சரணடைய வந்துகொண்டிருந்ததால் படையினருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியாமற்போய்விட்டது. இதனால் மாலை 6.00 மணிக்குப் பிற்பாடு பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உள்ளே எடுக்கும் பணியை படையினரே நிறுத்திவிட்டார்கள். அன்றையதினம் அதாவது 16-ம்நாள் சரணடைந்த மக்களை முல்லைத்தீவில் வட்டுவாகல்-செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கு தெற்குப்புறமாகவுள்ள கரைச்சி வெளிப்பகுதியில் தங்கவைத்திருந்தார்கள். அந்த வெளிப்பகுதியைச் சூழவும் முட்கம்பிவேலி அமைத்திருந்தனர் படையினர். மேமாதம் 16-ம் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 11 (துயரம்)

vp11

2009-ம்ஆண்டு மேமாதம் 10-ம்நாளன்று முள்ளிவாய்க்கால்ச் சந்தியை அரசபடையினர் ஆக்கிரமித்துக் கொண்டதையடுத்து போர்ச்சூழல் மேலும் தீவிரமடைந்தது. வானத்தில் பட்டாசுகள் வெடித்ததைப் போலவே கனரகத் துப்பாக்கிகளின் ரவைகள் இரவு பகலாக சடசடத்துக்கோண்டேயிருந்தன. போதாக்குறைக்கு எறிகணைகளும் கொத்துக்குண்டுகளும் ஆங்காங்கு வீழ்ந்துவெடித்துக்கொண்டிருந்தன. மகிந்தஅரசு தாம் யுத்தத்தில் கனரகஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என்று அன்றைய இந்தியஅரசின் மன்மோகனசிங் தலைமையிலான மத்தியஅரசிற்கு உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும் வன்னியில் இறுதியுத்தம் முடிவுற்ற 2009-ம்ஆண்டு மேமாதம் 18-ம்நாள் வரையிலும் கனரக ஆயுதங்களையும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் யுத்தத்தில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு யுத்தவலயத்தில் இறுதியாக அகப்பட்டிருந்த மூன்று லட்சம் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 10 (ஏக்கம்)

vp10

இரட்டைவாய்க்காலில் நிலைகொண்டிருந்த அரச படையினர் கரையாம்முள்ளிவாய்க்காலை நோக்கி இருதடவைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் விடுதலைப்புலிகளின் பலமான எதிர்த்தாக்குதலால் அவை முறியடிக்கப்பட்டன என்று கடந்த ஒன்பதாவது பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இரட்டைவாய்க்காலில் நிலைகொண்டிருந்த படையினரால் ஏவப்பட்ட எறிகணைகளும் துப்பாக்கி ரவைகளும் கரையாம் முள்ளிவாய்க்காலை தாராளமாகவே ஆக்கிரமித்துக்கொண்டன. இதனால் கரையாம்முள்ளிவாய்க்காலில் குடியிருந்த சுமார் மூன்றுலட்சம் மக்களும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரேயொரு இடமான வெள்ளாம்முள்ளிவாய்க்காலை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். கரையாம் முள்ளிவாய்க்கால் வீதியோரங்களில் பொதுமக்களால் கைவிடப்பட்ட உந்துருளிகளும் வாகனங்களும் தேடுவாரற்றுக்கிடந்தன. அத்தோடு கடற்கரை மணல்வெளியெங்கணும் பொதுமக்கள் குடியிருந்ததற்கு அடையாளமாக அவர்கள் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 09 (வீரம்)

vp09

2009-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம்திகதி மாத்தளன் அம்பலவன் பொக்கணை கிராமங்களை அரசபடையினர் முற்றுகையிட்டு முழுமையாக ஆக்கிரமித்து ஒரு வாரத்திற்குள்ளேயே வலைஞர்மடத்தையும் தாண்டி வலைஞர்மடத்தையும் இரட்டைவாய்க்காலையும் பிரிக்கும் கிரவல் வீதி வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர். குறித்த இந்த வீதிக்கு அண்மையில்த்தான் நான் முன்னர் குறிப்பிட்டதுபோல மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது. இதன் பிற்பாடு மாவீரர் துயிலுமில்லம் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் கப்பல்வீதிக்கு அண்மையில் இடம்மாற்றப்பட்டிருந்ததுவும் குறிபிடத்தக்கது. மாத்தளனிலிருந்து விடுதலைப்புலிகளின் எதிர்ப்புக்கள் எதுவுமின்றி குறித்த இந்த கிரவல்வீதி வரையிலும் முன்னேறியிருந்த படையினர் அதற்கப்பாலும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டபோதுதான் விடுதலைப்புலிகளின் படையணிகளின் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 08 (சோகம்)

vp08

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுவதோடு வித்துடல்கள் கிடைக்கப் பெறாதவர்களின் நினைவாக நினைவுக்கற்கள் நாட்டப்பட்டு புனிதமான வணக்கத்திற்குரிய இடங்களாக மாவீரர் துயிலும் இல்லங்களே விளங்கியது. தாயகத்தில் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட தமிழீழத்தாயகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்றிருந்தன. 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் சிங்களப்பேரினவாதப்படைகளுடன் மீண்டும் நான்காவது கட்ட ஈழப்போர் மூண்டபின்னர் குறுகிய காலத்திலேயே கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்றிருந்த மாவீரர்துயிலும் இல்லங்கள் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியது. யாழ்hழ்குடாநாட்டிலும் வவுனியாவிலும் 2005-ம்ஆண்டு பிற்பகுதியில் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் வெளியேறியதையடுத்து அந்தத் துயிலுமில்லங்களின் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 07 (சலிப்பு)

vp07

வலிசுமந்த தடங்களை பதிவாக்குகின்றபோதுதான் கடந்த பதிவுகளில் தவறவிடப்பட்ட விடயங்கள் சிலவும் நினைவுக்கு வருகின்றன. கடந்த பதிவுகளில் பதியப்பட்டிருக்க வேண்டிய சம்பவங்களை மீள மனக்கண் முன்நிறுத்தி இயன்றவரை வரிகளாக்கி ஏழாவது பதிவாக இங்கு பதிவாக்கியிருக்கின்றேன்.  2009-ம்ஆண்டு பெப்ரவரிமாதம் 01-02 ம் திகதிகளில் விடுதலைப்புலிகள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நிலைகொண்டிருந்த கேப்பாப்புலவு முள்ளியவளை நோக்கியதாக ஒரு பாரிய வலிந்ததாக்குதலை மேற்கொண்டனர். இந்த வலிந்ததாக்குதல் தொடக்கத்தில் விடுதலைப்புலிகளுக்கு வெற்றிகளைக் குவித்திருந்தாலும் அந்த வெற்றிக்களிப்பு நீண்டநேரம் நீடிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக புலிகள் தாக்குதலை மேற்கொண்டதனால் ஆரம்பத்தில் படையினர் ஆடித்தான்போனார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு ...

Read More »

வலிசுமந்த பதிவுகள்- 06 (வடு)

vp06

அது 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப் பகுதி. அப்போது வன்னியில் அதுவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் அம்பலவன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய நான்கு கரையோரக் கிராமங்களைத் தவிர மற்றைய அனைத்து நிலப் பரப்புக்களிலும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் அகலக்கால் பதித்திருந்தனர். மேற்குறித்த நான்கு கிராமங்களிலும் நான்குலட்சம் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். மாத்தளனில் மாத்தளனையும் தெற்காக இரணைப்பாலையையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் அமைந்திருந்த இந்து மயானத்தோடு அரச படையினரின் முன்னரங்கப் பகுதி அமைந்திருந்தது. அம்பலவன் பொக்கணையில் பொக்கணையையும் ஆனந்தபுரத்தையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்)

vp05

சமாதானத் தேவதையாக ஆட்சிபீடம் ஏறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம். 1995-ம்ஆண்டின் பிற்பகுதியில் சூரியக்கதிர்-01 படை நடவடிக்கையையும் 1996-ம்ஆண்டின் முற்பகுதியில் சூரியக்கதிர்-02 படை நடவடிக்கையையும் யாழ் குடாநாட்டின்மீது கட்டவிழ்த்து விட்ட சந்திரிகா அரசு இலட்சக்கணக்கான மக்களை குடாநாட்டிலிலிருந்து கிளாலிக்கடல் நீரேரியூடாக வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு இடம்பெயரவைத்து மாபெரும் சனப்பெயர்வு அவலத்தையும் அரங்கேற்றியிருந்த பெருமையும் அம்மையாரையே சாரும். ஆனாலும் யாழ் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்த மக்களையும் ஆட்சி பீடத்திலிருந்த சந்திரிகா அரசு நிம்மதியாக வாழவிடவில்லை. ...

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

vp04

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன. இலங்கைத்தீவை எடுத்துக்கொள்வோமாயின் வடமாகாணத்தில் யாழ்மாவட்டம் வடமராட்சிவடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைநகரம் உள்ளிட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களும் ...

Read More »