Author Archives: sigaram

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400

ஸ்ரீலங்கா அமைச்சரவையில் மிக விரைவில் மாற்றமொன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Read More »

முற்றுகையிட்ட பட்டதாரிகளுக்கு வடக்கு முதல்வர் அறிக்கை மூலம் பதில்!

CV-Wigneshwaran

பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக் கோரி, தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முன்போ, அரச தலைவர் அலுவலகத்தின் முன்போதான் போராட வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Read More »

மிக் விமானக் கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்கிறது!

mig

மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

Read More »

பதவிக்காக, தான் சார்ந்த அமைப்பினை தூக்கி எறிகிறாரா அ.அஸ்மின்?! வடக்கு அரசியல் பரப்பில் பரபரப்பு!?

asmin2

வடக்கு மாகாணசபை மேலதிக உறுப்புரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் உறுப்பினராக உள்வாங்கப்பட்ட அ.அஸ்மிடம் இன்னொருவருக்கு குறித்த உறுப்புரிமையை வழங்கும்படி அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Read More »

பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த விசனம்!

maithripala and mahinda

மே தினத்தில் மக்கள் என்­னுடன் கைகோர்த்­ததன் பிர­தி­ப­ல­னா­கவே எனது பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது. என்னை அச்­சு­றுத்த முன்­னெ­டுக்கும் எந்த நட­வ­டிக்­கை­யையும் கண்டு நான் அஞ்­சப்­போ­வ­தில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அர­சாங்­கத்­துடன் தனிப்­பட்ட கார­ணி­க­ளுக்­காக முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. இந்த மக்­க­ளையும் நாட்­டையும் அழிக்கும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எதிர்த்தே நான் போராடி வரு­கின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

Read More »

கம்பளை சிறுவன் கடத்தல்; நடந்தது என்ன?!

child

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கங்கவட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்பில் இருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. குழந்­தை­யுடன் மாய­மான, பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி என கண்­ட­றி­யப்­பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்­தையை தடுப்பில் வைத்­தி­ருந்த இரு பெண்­க­ளை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க ...

Read More »

மஹிந்த நடிக்கிறார் – விளக்குகிறார் சந்திரிகா?!

(FILES) In this photograph taken on September 6, 2005, then-president of Sri Lanka Chandrika Kumaratunga (R) and her then-nominee for the forthcoming presidential election Mahinda Rajapakse chat at the 54th anniversary celebrations of their Sri Lanka Freedom Party in Colombo. Sri Lanka's former president has warned of a "short-lived peace" unless the government shares power with the ethnic Tamil minority after the end of the island's civil war, her office said July 25, 2011. Chandrika Kumaratunga, who ruled the island between 1994 and 2005, said her successor President Mahinda Rajapakse had followed a policy of "winner takes all" after crushing Tamil rebels in 2009.  AFP PHOTO/Lakruwan WANNIARACHCHI/FILES__

தமது பாது­காப்பை அதி­க­ரிக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நடிப்­பது ஏற்­க­னவே அவரும் அவ­ரது குடும்­பத்தில் உள்­ள­வர்­களும் அனு­ப­வித்த சிறப்பு சலு­கையின் கார­ண­மா­க­வே­யாகும். யுத்தம் நடந்த காலப்­ப­கு­தியில் இரு மாதங்­க­ளுக்கு எனது ஒட்­டு­மொத்த பாது­காப்பு அதி­கா­ரி­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பா­யவும் இணைந்து இல்­லா­ம­லாக்­கினர்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 12 முதல் – எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவிப்பு!

may-18-0

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.  முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் மே – 18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், 12 ஆம் திகதி தொடக்கம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

மஹிந்தவின் பாதுகாப்புத் தரப்பினரில் மேலும் ஐம்பதுபேர் வெளியே?!

mahi

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாது­காப்பு கட­மை­யி­லி­ருந்து மேலும் 50 பேர் இன்று (நேற்று) நீக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

Read More »

கறுப்புக் கொடி விவகாரம்; சர்ச்சையில் சிக்கினார் வீரவன்ச!

Wimal Weerawansa_4

வெசாக் தினத்தில் மஞ்சள் கொடியை அகற்றி கறுப்புக்கொடி தூக்குமாறு தெரிவித்துள்ளதன் மூலம் விமல் வீரவன்ச பௌத்த தர்மத்தை இழிவு படுத்தியுள்ளார். புத்தி பேதலித்துப்போனவர்களால் மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

Read More »