1537515720-jaffna-2

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விலயுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

தமது விடுதலையை விலயுறுத்தி இன்று எட்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இன்று (21) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பேருந்து நிலைய்திற்கு முன்பாக காலை 10 மணிமுதல்11 மணி வரை இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பையோ அல்லது குறுகிய கால புனர்வாழ்வினை வழங்கியோ விரைவில் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்றைய போராடடத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விடயம் தாமதிக்கப்படும் பட்சத்தில் வட மாகாணம் தழுவிய போராட்டங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*