mugama-2

கண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரித்தப்படுத்த நடவடிக்கை

கண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரித்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக,மீள் குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

யுத்தம் நிலவிய பிரதேசங்களில் கண்ணி வெடிகளை அகற்றும் தேசிய வேலைத்திட்டம் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இதன் கீழ் இதுவரையில் 137 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மேலும் 28 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில், இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை 2020 ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*