palaly-ariport-660x330

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி -இந்தியா

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், விமான நிலைய அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான தமது ஆற்றலும், நிபுணத்துவமும், உலகளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*