IMG_7633 (1)

மன்னார் மனித எலும்பு கூடுகள்அகழ்வுப் பணிகள் 72 வது நாளாக தொடர்கிறது

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று 72வது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு மற்றும் ஆய்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் இந்த பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

குறித்த மனித எலும்புக்கூடு அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்றைய அகழ்வு பணியின் போதும் அதே போன்று கை கால்கள் கட்டப்பட்டுடிருந்த நிலையில், மூன்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*