download-2

சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள் – ஜனாதிபதி

போட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிவித்திகலயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

சில நாட்களுக்கு முன்னர் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பு நடவடிக்கை அவர்களது வெற்றி என்று அவர்கள் கூறுகின்றார்கள். என்றாலும் மொட்டு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

மொட்டும் ஐக்கிய தேசியக் கட்சியும் தம்மைப்பற்றி கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியிலமைந்த மிகையான மதிப்பீடுகள் அவை. இதனை நான் கூற வேண்டும். மொட்டு கட்சியினர் தனியாக அசாங்கத்தை அமைக்க முடியுமென்று எண்ணுவார்களாயின் அது ஒரு மாயை. ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியுமென்று எண்ணினால் அதுவும் மாயையே.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்டது. இந்த 15 இலட்சத்தை பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டால், பெறுபேறுகள் எப்படியிருக்கும். இதில் மொட்டு கட்சிக்கு வெற்றி கிடைத்தது. அந்த பெறுபேறுகளின்படி மொட்டு கட்சிக்கு எத்தனை பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும். 102 ஆசனங்களே அவர்களுக்கு கிடைக்கும். 102 ஆசனங்களை கொண்டு எவருக்கும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது. நாம் 15 இலட்சம் வாக்குகளை பெற்றோம். கட்சி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டோம்.

கடந்த மூன்று நான்கு மாதங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீள் கட்டமைக்கும் பணிகளை சிறப்பாக முன்னெடுத்தோம். எமது செயற்குழு தெரிவுகளின்போது 2000, 3000 பேர்கள் கலந்துகொண்டனர். பெப்ரவரி 10ஆம் திகதி 15 இலட்சமாக இருந்த எண்ணிக்கையை நாம் 20 இலட்சமாக அதிகரித்திருக்கிறோம். மொட்டுக்கும் சரி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரி நாங்கள் இன்றி அரசாங்கத்தை அமைக்க முடியாதென்பதை நான் தெளிவாக கூறுகின்றேன். எனவே எதிர்வரும் காலங்களில் கட்சியை வளமாகக் கட்டியெழுப்ப வேண்டும். ஒழுங்கமைக்கும் பணிகளை பலப்படுத்த வேண்டும். எனவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*