AACA1B70-6EED-46B4-919C-A4471D9D387A

மட்டு மாநகரசபை உறுப்பினர் ஜெயந்திரகுமார் மீது தாக்குதல் முயற்ச்சி.

மட்டக்களப்பு மாநகர சபையின் திருச்செந்தூர் 12 ஆம் வட்டார உறுப்பினரான சீனித்தம்பி ஜெயந்திரகுமார் மீது நேற்று (09) பி.ப 6.50 மணியளவில்  கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அங்கு வந்த  15 பேர் கொண்ட கும்பல் பொல்லு மற்றும் தடிகளுடன் குறித்த உறுப்பினரைத் தாக்குவதற்கு அவரது வீட்டிற்கு வந்தனர் அப்போது  அவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர் பூபாலபிள்ளை இந்திரன் என்பவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர் அவர்  இப்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தரன் ( பாண்டி) என்பவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

A1266BBB-E72C-4361-BE96-04DF0449A197 6FE59B90-4AFF-44AF-801F-2613FCA00DF5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*