5ef8e65321fbd3e13cf909a39eb6909a_XL

மலையக மாணவர்களின் கணிதம் மற்றும் ஆங்கில பாட திறமைகளை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

மலையகத்தில் கல்விபயிலும் தரம் இரண்டு தரம் மூன்று மாணவர்களின் கணிதம் மற்றும் ஆங்கில பாடத்தில் திறமைகளை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கேசவலிங்கம் தலைமையில் ஆரம்பமானது.

மலையக இளைய தலைமுறையினரின் பங்களிப்போடு பெருந்தோட்ட பாடசாலை சிறார்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக இந்த வேலைத்திட்டத்தை ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் சேவாலங்கா நிறுவனம் முன்னெடுக்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று டிலரி தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டு இரண்டு மற்றும் ஆண்டு மூன்று மாணவர்களின் கணிதம்,ஆங்கில அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதோடு இவர்களுக்கான இந்த செயற்பாடுகள் பாடசலை நேரம் நிறைவடைந்த பின்பு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் , ஜப்பான் நாட்டின் உத்சுனோமியா பல்கழைக்கழகத்தின் டாக்டர்.சுகுமுரா கசுனரி, இலங்கைக்கான ஜெய்கா நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி கப்ரல் இந்திக, சேவாலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சுப்பிரமணியம் சிவபாக்கியம் ,அம்பேகமுவ பிரதேச செயலகத்தின் அபவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி மோகனராணி , அப்மேகமுவ வலய கல்வி உதவி பணிப்பாளர் இலட்சிய ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*