6C3E23EC-8948-41D4-88CB-9BDAA3A286C1

 இலங்கையில் பௌத்தத்துக்கே முன்னுரிமை- நல்லாட்சி  அரசு.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தினம் (07) உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு வரைவில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் முதன்மை இடத்தையும் அரசாங்கம் நீக்கவுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவரும் அமைச்சருமான, லக்ஸ்மன் கிரியெல்ல புதிய அரசியலமைப்பிலும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கா அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்தார். 

தொடர்ந்து பேசுகையில் பௌத்த மதத்தினை  பாதுகாப்பதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பின் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பெளத்த மதமே தொடர்ந்தும் இலங்கையின் முதன்மையான மதமாக இருக்கும். ஆகவே ஒன்றினைந்த எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது அதனை அனைவரும் காணலாம்.

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை வெளியிடும் வகையில் அரசியலமைப்பு வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அத்துடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

AACA8A54-9432-48E4-9F8F-1512F4641342

02A4EDB6-EC6E-41EB-875E-9F5AA83A16F4

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*