namal-rajapaksa-1101

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தின் அடுத்தக்கட்டம் கண்டியில்

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தின் இரண்டாவது கட்டம் கண்டியில் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், அமைதியாக நேற்று தாம் மேற்கொண்டிருந்த போராட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டிருந்தாகவும், இலங்கையின் போராட்ட வரலாற்றில் 12 மணித்தியாலங்கள் நடைபெற்ற முதலாவது மாபெரும் போராாட்டம் இது எனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை – நெளும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை முடக்கவும், போராட்டத்தில் குழப்பங்களை விளைவிக்கவும் அரசாங்கம் எடுத்துக்கொண்டிருந்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேசிய அரசாங்கத்தை உடனடியாக கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*