31050cb467fed79bbb9f0da905573c38

படுகாயமடைந்தவரும் உயிரிழப்பு, இறந்த இருவரின் மனைவிமாரும் கர்ப்பிணிகள்

40910874_755420724790025_8686490851293003776_nமாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிந்த போது குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தவரும் இன்று(05) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வரும் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிசைப் பிரிவில் சிகிசைப்பெற்று வந்த நிலையில் இன்று(05) மாலை நான்கு மணியளவில் சிகிசை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்றையதினம்(04)  இவரின் கர்ப்பிணியான மனைவி நஞ்சருந்தி  தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு பின்னர் சிகிசைக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏற்கனவே உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த பத்மநாதன் திலீபனின் மனைவியும் நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*