வடக்கில் 25 ஆயிரம் கல்வீடுகள் – சிவஞானசோதி

வடக்கில் 25 ஆயிரம் கல்வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவிருப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகள்  3 வாரங்களில் ஆரம்பமாகும் என்று தெரிவித்த அவர் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்விகோரல்கள் முடிவடைந்துளள்ளன.

மன்னார் , மடு தேவாலய பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய கலைமகள் மகாவித்தியாலயத்தை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இப்பாடசாலை பாதுகாப்பு கட்டளைத் தளபதியினால் செப்டம்பர் 6 ஆம் திகதி யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*