40582690_2332722366743107_5533882554202980352_n

வலம்புரி பத்திரிகை சிலரால் எரிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபை  உறுப்பினர் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பத்திரிகையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகையில் இன்று சனிக்கிழமை வெளியான தலைப்புச் செய்தியில் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது என அஸ்மின் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் என எழுத்தப்பட்டிருந்தது.

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மீன் , ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும் , விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் , அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் இன்றைய தினம் சனிக்கிழமை வலம்புரி பத்திரிகை “முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மீன் ” என தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தினார்கள்.

மேலும் வலம்புரி பத்திரிகையானது வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக செயற்படுகிறது எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*