ranil

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் விடுத்த கட்டாய அறிவிப்பு!

அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம், 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில், அரசு பல முக்கிய பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்றத் தீர்மானித்திருப்பதால், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு கட்டாயமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம்(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களையும் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*