namal-rajapaksa

அரசாங்கம் கவிழப்போகின்றது என்கிறார் நாமல்!

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாரிய போராட்டம் நல்லாட்சி அரசாங்கம் கவிழப்போகின்றது என்பதை தெரியப்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்தவுள்ள பாரிய போராட்டமே நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற பாரிய போராட்டமொன்றாக கருதப்படும்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள மக்களைக் கண்டவுடன் ஒரு சிலர் நாட்டையே விட்டே ஓடக்கூடும்.

நாங்கள் இப்போராட்டத்தை நடத்துவதற்கு முக்கிய காரணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கே ஆகும். அத்துடன் எங்களின் கரங்களிளோ மனங்களிளோ எந்தவித அழுக்கான எண்ணங்களும் இல்லை.

அதனால்தான் எந்ததொரு பயமும் இல்லாமல் எமது மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக உண்மையினை நிரூபிக்கும் பொருட்டு நீதிமன்றங்களுக்கு கூட சென்று வருகின்றோம்.

நாங்கள் எப்போதும் நாட்டு மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்போம்” என நாமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*