mahinda yapa

மக்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்த அரசு நடவடிக்கை என்கிறது மஹிந்த அணி!

மக்­கள் எதிர்ப்­புப் போராட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அனைத்து தடை­க­ளை­யும் மீறி மக்­கள் தங்­கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த கொழும்­புக்கு வர­வேண்­டும் என்று மகிந்த அணி வலி­யு­றுத்­திள்­ளது.

மகிந்த அணி அர­சுக்கு எதி­ராக எதிர்­வ­ரும் 5ஆம் திகதி கொழும்­பில் நடத்த திட்­ட­மிட் டுள்ள மக்­கள் எதிர்ப்­புப் போராட்­டம் தொடர்­பாக கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறப்­பட்­டது.

இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்த யாப்பா அபே­வர்த்­தன மேலும் தெரி­வித்­த­தா­வது,

கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­வ­ரும் 5ஆம் திகதி அர­சுக்கு எதி­ராக மக்­கள் எதிர்ப்பு போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்­தப் போராட்­ட­மா­னது அர­சி­னால் பாதிக்­கப்­பட்ட அனைத்­துப் பிரி­வி­ன­ருக்­கு­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக நாட்­டின் விவ­சா­யத்­து­றை­யில் ஈடு­பட்­டு­வ­ரும் விவ­சா­யி­கள் அர­சின் சில வேலை­க­ளால் அவர்­க­ளின் விவ­சாய நட­வ­டிக்­கை­களை கைவி­டும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். அதே­போன்று கால்­நடை வளர்ப்­போர் மற்­றும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு தேவை­யான உத­வி­க­ளைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அர­சி­டம் எந்த வேலைத்­திட்­ட­மும் இல்லை. மக்­கள் அரசு மீது விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­ற­னர். மக்­க­ளின் எதிர்ப்பை அர­சுக்கு காட்­டு­வ­தற்கு தேர்­தலே ஒரே­வ­ழி­யா­கும். தேர்­த­லுக்­குச் சென்­றால் மக்­கள் உரிய பதிலை வழங்­கு­வார்­கள் என்ற அச்­சம் அர­சுக்கு இருக்­கின்­றது. மாகா­ண­சபை தேர்­தலை திட்­ட­மிட்டு அரசு பிற்­போட்டு வரு­கின்­றது.

மக்­கள் தங்­கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக எதிர்ப்­புப் போராட்­டத்தை கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்­தப் போராட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­துள்­ளது. தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு இலங்கை போக்­கு­வ­ரத்­துக்­குச் சொந்­த­மான பேருந்­து­கள் வழங்­கக்­கூ­டாது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஏன் அரசு இந்­த­ளவு அச்­சப்­ப­டு­கின்­றது என்று நாங்­கள் கேட்­கின்­றோம்.

எதிர்­வ­ரும் 5ஆம் திகதி கொழும்­பில் இடம்­பெ­றும் போராட்­ட­மா­னது மிக­வும் அமை­தி­யா­ன­தும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­ட­மா­க­வும் இடம்­பெ­றும். இதில் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என்ற அச்­சம் அர­சுக்கு இருக்­கின்­றது. அத­னால்­தான் தடை­களை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. அரசு எந்த தடை­களை ஏற்­ப­டுத்­தி­னா­லும் மக்­கள் அத­னை­மீறி நடை­ப­வ­னி­யா­க­வே­னும் அன்­றைய தினம் எதிர்ப்பு போராட்­டத்­தில் கலந்து கொண்டு மக்­கள் பலத்தை அர­சுக்­குக் காண்­பிக்க வேண்­டும் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*