4

ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் அவசியம் இல்லை – மஹிந்த அமரவீர

ஒன்றிணைந்த எதிரணி அடுத்த மாதம் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதன் பொருட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க எவ்வித அவசியமும் இல்லையென, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்ற சிந்தனையானது ஏமாற்றமளிக்கும் என்பதுடன், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் மேலும் பலமடையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கமானது பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் எவ்வித முடிவுகளையும் கொண்டு வராது எனவே, காரணமின்றி அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனரென்றும், கொழும்புக்கு அதிக மக்கள் வரும் தினத்தில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கக் காரணம், பொதுமக்களை அசௌகரியப்படுத்துவதற்கு என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*