sivaji

விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் குறித்து சிவாஜிலிங்கம் கருத்து!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் ஒதுங்க வேண்டும் என ஜாதிக கேல உறுமய தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வட மாகாண முதலமைச்சர் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதா, இல்லையா என்பதை விக்கினேஸ்வரனே தீர்மானிக்க வேண்டும்.

அவரை பிரதிநிதியாக நியமிப்பதா, இல்லையா என்பதை வட பகுதி மக்களே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பாக தெற்கில் உள்ள தலைவர்கள் எவரும் தீர்மானிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள், இராணுவ வீரர்களுக்கு வைக்கின்ற நினைவுச் சின்னங்களே விடுதலைப் புலிகளது வீர வரலாற்றை பறைசாற்றும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு உங்கள் இராணுவம் கொல்லப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் அதில் எமது போராட்ட வரலாறும் கூறப்பட வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள்.

பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆளும் இனம், நாங்கள் ஆளப்படும் இனம் என்ற சிந்தனை இருக்கும் வரை, நிரந்தர அரசியல் தீர்வோ, நல்லிணக்கமோ ஏற்படாது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*