Sarath-Fonseka1

பொது வேட்பாளர் விவகாரத்துக்கு பொன்சேகா மீண்டும் எதிர்ப்பு!

எதிர்வரும் காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை மீண்டும் களமிறக்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது. அவ்வாறான எண்ணத்தை புறக்கணித்துவிடவேண்டும்.

2020 ஜனாதிபதி தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற சிந்தனையே இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திலிருந்து அகற்றவேண்டும்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அது மக்களின் விருப்பங்களிற்கு மாறானதாக அமையும். அரசியலில் காணப்படும் பலவீனங்களை மகிந்த ராஜபக்ச எப்போதும் பயன்படுத்த முனைவார்“ எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*