ranil

தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் சொன்ன ரணில்!

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேர்தலை விரைவாக நடத்துவதற்கே முயற்சித்து வருகின்றோம். தேர்தல் முறைமை தொடர்பான தீர்மானங்கள் கிடைக்கப்பெற்றவுடன் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அதாவது தேர்தலை எம்முறைமையில் நடத்துவது என்பதில் உடன்பாடற்ற தன்மை காணப்படுகின்றமையானது தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணமாகியுள்ளது.

இருந்த போதிலும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான இறுதித் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம்“ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*