image_b87c0e1469

கழிவு சுத்திகரித்தலை வைத்தியசாலை நேரடியாக கண்காணிக்கும்

யாழ். போதனா வைத்தியசாலையால் வெளியேற்றப்படும் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் விடப்படும். இதனை இனி வைத்தியசாலை நிர்வாகமே நேரடியாகக் கண்காணிக்கும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் பு.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், மீறி சுத்திகரிக்காமல் கழிவுகளை கடலில் கலந்தால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடலில் முறையற்ற விதத்தில் வைத்தியசாலைக் கழிவுகள் கலந்து விடப்படுவது குறித்து ஏற்கனவே பல தரப்பட்டவர்களும் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், குறித்த பகுதியை வைத்தியசாலைப் பணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*